News August 4, 2024

ஃபார்முலா 4 கார் ரேஸிங் டிக்கெட் விற்பனை தொடக்கம்

image

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட்(F4) போட்டிக்கான டிக்கெட் விற்பனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்தாண்டு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிகள் மீண்டும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ. சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

Sports 360°: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

image

*SAFF ஃபுட்ஸல் சாம்பியன்ஷிப்பில், இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது *ஆசிய மகளிர் ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் பிப்.22-ல் தாய்லாந்தில் தொடங்குகிறது *சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பஞ்சாப் அணிக்காக சுப்மன் கில் விளையாடுவார் என தகவல் *T20 உலகக் கோப்பை தொடரின், முதல் சில போட்டிகளில் பேட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் என அறிவிப்பு

News January 20, 2026

ஐநாவுக்கு செக் வைக்க முயலும் டிரம்ப்

image

ஐ.​நா. சபைக்கு மாற்​றாக ‘போர்டு ஆப் பீஸ்’ என்ற புதிய சர்​வ​தேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்​ளார். இந்த அமைப்புக்கு டிரம்ப் தலைமையேற்றுள்ள நிலையில், இதில் ₹9000 கோடி கட்டணம் செலுத்தி மற்ற நாடுகள் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகள் வரை அந்த அமைப்பில் இருக்கலாம் எனவும் அமெரிக்கா விளக்கியுள்ளது.

News January 20, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 586 ▶குறள்: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. ▶பொருள்: ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.

error: Content is protected !!