News August 6, 2025
இந்தியா மீதான வரி.. டிரம்ப்பை சாடிய முன்னாள் USA அதிகாரி

வரிவிதிப்பில் இறங்குகிறேன் என்ற பெயரில், நட்பு நாடான இந்தியாவின் உறவை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என டிரம்ப்பிற்கு, ஐநாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவிற்கு வரி விதிப்பில் இருந்து 90 நாள்கள் விலக்கு அளிக்கப்பட்டதையும் அவர் சாடியுள்ளார். மேலும், இது இந்தியாவை பகைமை அடையச் செய்யும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 516 ▶குறள்: செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். ▶பொருள்: முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.
News November 11, 2025
ஷமிக்கு ஆதரவாக களமிறங்கிய கங்குலி

AUS, SA அணிகளுக்கு எதிரான போட்டிகளில், இந்திய அணியில் ஷமி இடம்பெறாதது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஷமியை அணியில் இருந்து விலக்கி வைக்க, எந்த காரணத்தையும் தன்னால் கண்டறிய முடியவில்லை என கங்குலி தெரிவித்துள்ளார். ரஞ்சி டிராபியில் ஷமி சிறப்பாக விளையாடி வருவதாகவும், தேர்வுக்குழு நிச்சயம் அதை பார்த்திருக்கும் என்றும் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 11, 2025
பிஹாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல்

பிஹாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, அம்மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் 20 மாவட்டங்களில் மொத்தம் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


