News December 12, 2025
FLASH: வெள்ளி விலை ஒரே நாளில் ₹6,000 உயர்ந்தது

<<18540317>>தங்கமும்<<>>, வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு விலை உயர்ந்து வருகின்றன. இன்று(டிச.12) ஒரே நாளில் பார் வெள்ளி கிலோவுக்கு ₹6,000 அதிகரித்துள்ளது. இதனால், 1 கிராம் ₹215-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,15,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் இந்திய சந்தையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லையா?

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக அவருக்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை அப்படி நிகழ்ந்தால், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு இது பயனளிக்கும் என கருதுகிறார்களாம். நிதின் நபினை தொடர்ந்து இளைஞரான அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News January 25, 2026
₹1,200 பென்ஷன் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உயிரிழந்தால், குடும்ப ஓய்வூதியமாக ₹1,200 வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறு அங்கன்வாடி பணியாளர்கள், வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியமாக ₹1,100 வழங்கப்படும் எனவும் CM பேரவையில் அறிவித்தார்.
News January 25, 2026
ஆட்சியில் பங்கு: ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன ராகுல்

ஆட்சியில் பங்கு தர வேண்டும் எனப் பேசி, திமுக-காங்கிரஸ் கூட்டணி சர்ச்சையில் மையப்புள்ளியாக இருந்தவர் மாணிக்கம் தாகூர். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல் தெரிவித்ததாக மாணிக்கம் தாகூர் MP கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக தனது கருத்துகளை ராகுலிடம் தெளிவாக விளக்கிவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.


