News January 13, 2026
FLASH: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்

சர்வதேச சந்தையில் நேற்று போலவே இன்றும், தங்கம் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $83 உயர்ந்து $4,592 ஆக மாறியுள்ளது. இதனால், இன்றும் இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை(₹1,04,960) எட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News February 10, 2026
செல்வப்பெருந்தகையின் தொகுதியை பறிக்கிறதா திமுக?

செல்வப்பெருந்தகைக்கு சொந்த கட்சியில்தான் எதிர்ப்புகள் என்றால், திமுகவும் தன் பங்குக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளதாம். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி MLA-ஆக இருக்கும் செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் அதே தொகுதியை ஒதுக்கக்கூடாது என திமுகவினர் சிலர் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த செல்வப்பெருந்தகையும் வரும் தேர்தலில் திருவள்ளூரில் போட்டியிடலாமா என ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
News February 10, 2026
தலைமைச் செயலாளர்களுக்கு முக்கிய உத்தரவு

தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், ECI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 10, 2026
மகளிருக்கு ₹5,000.. தமிழக மக்களுக்கு HAPPY NEWS

பிஹாரில் சுயதொழில் தொடங்க பெண்களுக்கு ₹10,000 வழங்கிய திட்டம், NDA கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க பெரிதும் உதவியது. அதே போன்றதொரு திட்டத்தை தமிழகத்திற்கும் அறிவிக்க PM மோடி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை முறியடிக்கும் வகையில், மகளிருக்கு ₹5,000 வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சுயதொழில் திட்டமாகவோ, கடனுதவி திட்டமாகவோ இருக்கலாம் என சொல்லப்படுகிறது.


