News October 19, 2025
FLASH: இந்திய அணி பேட்டிங்

முதல் ODI-யில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி பெர்த் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ODI-ல் முதல் முறை கேப்டனாக சுப்மன் கில் அணியை வழிநடத்தவுள்ளார். இந்திய அணி: கில், ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், KL ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், சிராஜ். இந்த மேட்ச்சில் இந்தியா வெற்றி பெறுமா?
Similar News
News December 14, 2025
அரியலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
புதிய கட்சியை தொடங்கினார் மார்ட்டின் மகன்

புதுச்சேரியில் தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ (LJK) என்ற புதிய கட்சியை தொடங்கினார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்., பாஜக, காங்., திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்க, அவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இவரின் அரசியல் வருகையால், திமுகவும் ஜெகத்ரட்சகனை புதுச்சேரி முதல்வராக களமிறக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
News December 14, 2025
CSK குறிவைக்கும் முக்கிய வீரர்கள்!

2025 IPL-ல் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால், இம்முறை ஏலத்தில் சூப்பர் ஃபார்மில் இருக்கும் வீரர்களை வாங்க CSK முனைகிறது. ₹43 கோடி வைத்துள்ள CSK-வின் பிரதான டார்கெட் கேமரூன் கிரீன் அல்லது லியம் லிவிங்ஸ்டனாக இருக்கக்கூடும். டெத் பவுலிங்கிற்காக மதீஷா பதிரானாவை மீண்டும் குறைந்த விலையில் வாங்க முயற்சிக்கும். ஜடேஜாவின் இடத்தை நிரப்பிட உள்ளூர் லீக்கில் கலக்கும் பிரசாந்த் வீரை வாங்க CSK குறிவைத்துள்ளது.


