News September 28, 2025
உயிரை குடிக்கும் ரசிக வெறி

தென்னிந்தியாவில் நடிகர்கள் அரசியலுக்கு வரும் போது, அவர்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது. அவர்கள் நடத்தும் பொதுக்கூட்டம், ரோட்ஷோக்களில் அளவிற்கு அதிகமாக கூட்டம் கூடுகிறது. இந்த <<17853767>>ரசிக வெறி<<>>, பிஞ்சு <<17855716>>குழந்தைகளின்<<>> உயிர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. ஆகவே, உங்களுக்கு ஏதாவது நடந்தால் எந்த நடிகரும், அரசியல்வாதியும் வரமாட்டார்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
Similar News
News November 7, 2025
விஜய் பலவீனமானவர்: அப்பாவு

கரூர் விவகாரத்தில் CM ஸ்டாலின் பெருந்தன்மையாக நடந்து கொண்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும், விஜய் பலவீனமானவர் என தெரிவித்த அவர், ஒரு பிரச்னை என்றவுடன் அவரும் அவருடன் உள்ளவர்களும் ஓடி ஒளிந்து கொண்டார்கள் எனவும் கூறியுள்ளார். பலவீனமானவர்கள் தன்னை வீரன் என காட்டிக் கொள்ள எதையாவது சொல்லிக் கொள்வார்கள், அதைத்தான் விஜய் செய்து வருகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
News November 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 7, 2025
Cinema Roundup: ‘ஜனநாயகன்’ OTT உரிமம் ₹121 கோடி

*மகேஷ்பாபு – ராஜமௌலி இணையும் படத்தின் டைட்டில் வரும் 15-ம் தேதி வெளியாக உள்ளது. *‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் ₹121 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல். *‘குட் பேட் அக்லி’-யில் இளையராஜா பாடல் பயன்படுத்திய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு. *‘அரசன்’ படத்தின் கதை தனக்கு தெரியும் என நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.


