News October 1, 2025
பிரபல பாடகர் மரணம்.. புதிய திருப்பம்

பிரபல பாடகர் <<17761763>>ஸுபீன் கர்கின் மரணம்<<>> தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸுபீன் கர்க் சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மறைவில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவரின் மேலாளர், சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அசாம் காவல்துறை கைது செய்துள்ளது. இருவரையும் கஸ்டடியில் எடுத்துள்ள போலீஸ், ஸுபீன் மரணம் குறித்து தீவிரமாக விசாரணையை தொடங்கியுள்ளது.
Similar News
News December 13, 2025
அதிக சம்பளம் வாங்கிய ஹீரோக்கள்

2025-ம் ஆண்டு அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. இந்தாண்டு, ஒருபடத்துக்கு அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று தெரியுமா? இதுதொடர்பான தகவலை மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 13, 2025
G.R.சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய EX நீதிபதிகள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதனுக்கு ஆதரவாக, EX நீதிபதிகள் 56 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், INDIA கூட்டணி பதவிநீக்க நோட்டீஸ் கொடுத்தது கண்டிக்கத்தக்கது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் சித்தாந்த, அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்தும் முயற்சி. பதவிநீக்க நோட்டீஸை அரசியல் பழிவாங்கும் கருவியாக பயன்படுத்த கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
News December 13, 2025
ரேஷன் கார்டு பெயர் மாற்றம்.. இன்று சிறப்பு முகாம்!

ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை ஒரே நாளில் வழங்கும் வகையில் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் மண்டல அலுவலகங்களிலும், பிற மாவட்டங்களில் தாசில்தார் அலுவலகங்களிலும் காலை 10 – பிற்பகல் 1 மணி வரை முகாம்கள் நடைபெறும். ரேசன் கடைகளில் பொருள் வாங்க நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள், இன்றைய சிறப்பு முகாம்களில் அங்கீகாரச் சான்று பெற்று கொள்ளலாம்.


