News April 18, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 5
▶குறள்:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
▶பொருள்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை மற்றும் தீமை ஆகிய இரு வினைகளையும் ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
Similar News
News November 9, 2025
BREAKING: டிஜிட்டல் தங்கம்.. செபி விடுத்த வார்னிங்!

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது சமீபமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இது ஆபத்தானது என்று செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. செபி என்பது இந்தியாவில் பங்குச்சந்தை மற்றும் முதலீட்டாளர்களின் நலனை காக்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பு. டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோருக்கு எந்தவித சட்ட பாதுகாப்பும் இல்லை என்று கூறியுள்ள செபி, இந்த முதலீடு செபியின் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்றும் எச்சரித்துள்ளது.
News November 9, 2025
தொடரும் கொடூரம்: 4 வயது சிறுமிக்கு வன்கொடுமை

மே.வங்கத்தில் கடந்த சில மாதங்களாக தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், கொல்கத்தா ஹூக்லி நகரின் தாரகேஷ்வர் ரயில் நிலையத்தில், பாட்டியுடன் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி மீட்கப்பட்ட நிலையில், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
News November 9, 2025
7 நாள்களுக்கு 7 மூலிகை சாறுகள்!

இன்றைய சூழலில் அடிக்கடி உடலில் ஏதாவது ஒரு நோய் வந்து கொண்டே இருக்கிறது. நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் எளிய மூலிகைகள் பல, உடலை வலுப்படுத்தவும், நோய்களை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் அதை மருந்தாக சாப்பிடுவது பலருக்கும் சிரமமாக உள்ளது. ஜூஸ் ஆக குடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றனர். அப்படி, வாரம் முழுவதும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 7 மூலிகை சாறுகள் பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க.


