News March 24, 2024
ஈரோடு கணேச மூர்த்தி கவலைக்கிடம்

மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி தற்கொலை முயற்சி செய்து கவலைக்கிடமாக இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்த அவர், இன்று மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
Similar News
News November 8, 2025
சஞ்சு சாம்சனை இழுக்க CSK மீண்டும் முயற்சி

ராஜஸ்தானிடம் இருந்து சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய CSK மீண்டும் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சனுக்கு மாற்றாக முக்கியமான (ஜடேஜா அல்லது துபே) வீரரை CSK-விடம் ராஜஸ்தான் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த வீரரிடம் CSK பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் இடையில் டிரேடிங் நடக்கும் என்று ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News November 8, 2025
சனிக்கிழமை மட்டும் இந்த தவறை செஞ்சுடாதீங்க

சனிக்கிழமைகளில் சில விஷயங்களை செய்தால் சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீர்கள் என ஐதீகங்கள் சொல்கின்றன. சனிக்கிழமையன்று துடைப்பம், எண்ணெய், கத்திரிக்கோல் வாங்கக்கூடாது. அத்துடன், பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம். இதனால் உங்கள் செல்வ வளம் குறையும் எனவும், உடல்நலனில் பாதிப்புகள் வரலாம் எனவும் நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் நீங்கள் எப்படி வழிபடுவீங்க?
News November 8, 2025
தமிழ்நாட்டில் இருந்து இந்த சட்டமன்ற தொகுதி நீக்கமா?

ECI-ன் அதிகாரப்பூர்வ ‘ECINET’ செயலியில் உடுமலை தொகுதி(125) இடம் பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்த்து வருகின்றனர். ஆனால், திருப்பூர் மாவட்ட பட்டியலில் ‘Search your name in voter list’-ல் அவிநாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர்(வ), திருப்பூர்(தெ) மட்டுமே உள்ளன.


