News August 19, 2024

சீமான், விஜய்யிடம் ஆதரவு கோரும் இபிஎஸ்?

image

சரிந்துவரும் செல்வாக்கை மேம்படுத்தவும், DMKக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை கட்டமைக்கவும் வேண்டிய நிர்பந்தம் ADMKவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டணியில் நாதக, விஜய்யின் தவெக, பாமகவை இடம்பெற வைக்குமாறு மூத்த நிர்வாகிகள் EPS-யிடம் முறையிட, அவரும் அதற்கு பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது. இதையடுத்து மூத்த தலைவர்கள் சிலர் சீமான், விஜய்யுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News January 21, 2026

புதுவை: போக்ஸோ வழக்கில் வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

image

புதுவை மாநிலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆடியபாதம் (39). இவர் 2013-ம் ஆண்டு போக்ஸோ (POCSO) வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்து, தற்போது தலைமறைவாக உள்ளார். ​அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் வீட்டில் இல்லாததால், வரும் 23-ம் தேதி காலை 10:00 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News January 21, 2026

VIRAL: அமிதாப் பச்சன் வீட்டில் தங்கத்தில் டாய்லெட்!

image

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா, 2016-ல் எடுத்த செல்ஃபி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சனோடு ‘பிங்க்’ படத்தில் நடித்த போது விஜய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தங்க டாய்லெட் முன்பு செல்ஃபி எடுத்துள்ளார். அந்த செல்ஃபி உள்பட அமிதாப்புடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பகிர்ந்து, 2016 தனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டாக அமைந்ததாக அவர் தற்போது பதிவிட்டுள்ளார்.

News January 21, 2026

ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன?

image

பாமக (அன்புமணி), அமமுக என NDA கூட்டணியில் அடுத்தடுத்து கட்சிகள் இணைந்து வருகின்றன. அதேநேரம், திமுக, மாற்றுக் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை இணைத்து வருகிறது. இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ், கூட்டணி தொடர்பாக இன்று மாலை தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தவுள்ளாராம். எனவே, அவரது முடிவும் நாளைக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைப்பார்?

error: Content is protected !!