News January 13, 2025
TN முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இபிஎஸ் திட்டம்

DMK அரசின் அவலங்களை மக்களிடம் விளக்கும் வகையில், TN முழுவதும் EPS சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலில் ADMKவை வெற்றி பெறச் செய்ய பல்வேறு அரசியல் வியூகங்களை அவர் வகுத்து வருகிறாராம். அந்தவகையில், TN முழுவதும் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்ய மா.செக்களை அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் ஈரோட்டில் இருந்து அவர் பயணத்தை தொடங்குவார் எனத் தெரிகிறது.
Similar News
News November 12, 2025
எனக்கும் கடன் பிரச்னைகள் இருக்கு: விஜய் சேதுபதி

கோடிகள் சம்பாதிக்கும் தனக்கும் கடன் பிரச்னைகள் உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதற்கான கடன் இருந்தது, லட்சத்தில் சம்பாதித்தபோதும் அதற்கான கடன் இருந்ததாக குறிப்பிட்டார். தற்போது கோடிகளில் சம்பாதித்தாலும் கடன் பிரச்னை தீரவில்லை என்று கூறிய அவர், அதனுடன் வாழ கற்றுக்கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
டெல்லி குண்டு வெடிப்புக்காக மேலும் 2 கார்கள்

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் டாக்டர் உமர் அகமது, சதி செயலுக்காக மேலும் 2 கார்களை வாங்கியுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 2 கார்களும் எங்கே என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நாம் சுவாசிக்கும் காற்றும்.. மாசும்!

நாட்டில் காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியாமல் அரசும் திணறி வருகிறது. இந்த நிலையில்தான், இந்திய நகரங்களில், இன்று காலை 6 மணிக்கு நாட்டில் Air quality index எப்படி இருந்தது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. எந்த நகரம் மோசமாக இருந்தது என்பதை பார்க்க, மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பாருங்கள்.


