News June 19, 2024

சசிகலாவின் சபதத்தை கிண்டலடித்த இபிஎஸ்

image

அதிமுகவில் யாரும் சாதி அரசியல் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த சசிகலா, அதிமுகவை காக்கப் போவதாக கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள இபிஎஸ், சசிகலா கூறுவது 3 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாதவர், திடீரென வேலைக்கு செல்வேன் எனக் கூறுவது போல உள்ளதாக விமர்சித்தார். மேலும், அதிமுகவை காப்பாற்றுவது தொண்டர்கள் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 19, 2026

கூட்டணி விவகாரத்தில் விஜய் ஏமாற்றம்!

image

ஆட்சியில் பங்கு என அறிவித்தபிறகும் விஜய்யுடன் தற்போது வரை ஒரு கட்சி கூட கூட்டணி அமைக்கவில்லை என்பது அக்கட்சி நிர்வாகிகள் சிலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாம். குறிப்பாக அதிமுக, பாஜகவிலிருந்து வந்த சிலர் மீண்டும் தங்களது தாய் கழகத்திற்கே திரும்பலாமா என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தவெகவுடன் இணைவார் எனக் கூறப்பட்ட <<18891552>>TTV தினகரன்<<>>, NDA-வில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளாராம்.

News January 19, 2026

காங்கிரஸில் 71 மாவட்ட தலைவர்கள் மாற்றம்

image

TN காங்கிரஸில் அதிரடி மாற்றம் செய்து தேசிய தலைமை அறிவித்துள்ளது. உட்கட்சி பூசல், கூட்டணி விவகாரம், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநிலத் தலைமையின் உத்தரவையும் மீறிப் பல நிர்வாகிகள் பொதுவெளியில் பேசி வந்தனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் கார்கே, ராகுல் உள்ளிட்டோரின் ஆலோசனைக்கு பிறகு 71 மாவட்டத் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் காங்கிரஸுக்கு ‘கை’ கொடுக்குமா?

News January 19, 2026

நாளை TN சட்டப்பேரவை: கவர்னர் உரையாற்றுவாரா?

image

ஆண்டுதோறும் சட்டப்பேரவை முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. 2021-ல் RN ரவி பொறுப்பேற்ற பிறகு 2022-ல் மட்டுமே உரையை முழுமையாக வாசித்தார். 2023-ல் சில பகுதிகளை தவிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். 2024, 2025-ல் தேசிய கீதம் பாடப்படவில்லை என உரையை வாசிக்காமலே வெளியேறினார். இந்நிலையில், நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்திலாவது உரையாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

error: Content is protected !!