News May 4, 2024
முதல்வரின் கொடைக்கானல் பயணத்தை விமர்சித்த இபிஎஸ்

முதல்வரின் கொடைக்கானல் பயணத்தை ஈபிஎஸ் விமர்சித்துள்ளார். கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் அவதிப்படுவதாக தெரிவித்த அவர், இந்த நேரத்தில் முதல்வர் ஓய்வெடுக்க செல்வது கண்டனத்துக்குரியது என்றார். அதிமுக ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டிய ஊடகங்கள், திமுக ஆட்சியில் வாய்மூடி மெளனமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். 5 நாள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் நேற்று சென்னை திரும்பினார்.
Similar News
News November 10, 2025
2026 IPL ஏலம் எப்போது? வெளியான தகவல்

2026 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம், வரும் டிச.,15-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடுகளில் ஏலம் நடந்த நிலையில், நடப்பாண்டில் இந்தியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எந்த நகரத்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும், 10 அணிகளும் தக்க வைக்கப்படும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வரும் 15-ம் தேதிக்குள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 10, 2025
பில் கேட்ஸ் பொன்மொழிகள்

*நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. *நான் என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை. தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். *கடினமான வேலையைச் செய்ய நான் ஒரு சோம்பேறியைத் தேர்வு செய்கிறேன். ஏனெனில் ஒரு சோம்பேறி அதைச் செய்ய ஒரு எளிதான வழியைக் கண்டுபிடிப்பார். *நீங்கள் பெரும்பாலும் உங்கள் உள்ளுணர்வை நம்ப வேண்டும்.
News November 10, 2025
இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. குருவாயூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட், சேது சூப்பர்ஃபாஸ்ட், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து மட்டுமே புறப்படும், எழும்பூர் செல்லாது. அதேபோல், அகமதாபாத் – திருச்சி சிறப்பு ரயில் தாம்பரம், எழும்பூர் வழியாக இயங்காது.


