News October 1, 2025
எண்ணூர் விபத்து: ₹10 லட்சம் நிதியுதவி CM அறிவித்தார்

எண்ணூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். கட்டுமானப் பணியின் போது 9 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்கி CM உத்தரவிட்டுள்ளார். இதே போல PM மோடி உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
BREAKING: புதிய கட்சியை தொடங்கினார் ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, கழகமாக OPS மாற்றியுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டிச.23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். இதில், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என அறிக்கை வெளியிட்ட OPS, அதனை அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் (கட்சி) என மாற்றியுள்ளார்.
News December 14, 2025
75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்குகிறாரா EPS?

2026-ல் குறைந்தது 175 இடங்களில் அதிமுக போட்டியிட வேண்டும் என EPS கணக்கு போட்டுள்ளாராம். குறிப்பாக, மூத்த தலைவர்களுக்கு விரும்பும் தொகுதியில் சீட் கொடுத்து சமரசம் செய்யும் அவர், தனக்கு விசுவாசிகளாக இருக்கும் சுமார் 75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளார். தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டால், MLA-க்கள் விலை போய்விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News December 14, 2025
காஸாவை மிரட்டும் வானிலை: 3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

இஸ்ரேலுடனான போரில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள காஸா மக்கள், தற்போது கொடூரமான வானிலையின் பிடியில் சிக்கியுள்ளனர். கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழை, வெள்ளத்தில் சிக்கி, 3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். இதில், 8 மாத குழந்தை குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளது. இஸ்ரேல் முற்றுகையால் அத்தியாவசிய பொருள்கள் வருவது தடுக்கப்படுவதும் இந்த துயரத்திற்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.


