News June 13, 2024

போதை பார்ட்டி: தெலுங்கு நடிகைக்கு ஜாமின்

image

பெங்களூருவில் கடந்த மே 19ஆம் தேதி நடந்த ரேவ் பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக, தெலுங்கு நடிகை ஹேமா கைது செய்யப்பட்டார். இவர் உள்பட 27 பெண்கள் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில், பார்ட்டி நடந்த சில நாட்களுக்கு பிறகே மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், மேலும் அவரிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை எனவும் கூறி ஹேமாவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

ஒரே மேடையில் விஜய், ரஷ்மிகா: டும் டும் டும் தேதி வருமா?

image

சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கும், ரஷ்மிகாவுக்கும் திருமண நிச்சயம் நடந்து முடிந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் ரஷ்மிகாவின் ‘Girlfriend’ படத்தின் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் இன்று பங்கேற்கிறார். அதில் இருவரும் தங்கள் திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

News November 12, 2025

2028-க்குள் இந்தியா எங்கயோ போகப்போகுது!

image

2028-க்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என UBS நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் GDP வளர்ச்சி 2028–2030 நிதியாண்டுக்குள் சராசரியாக 6.5% அளவை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், 2026-ல் இந்தியா உலகின் 3-வது பெரிய நுகர்வோர் சந்தையாக மாறும் என்றும், ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவெடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News November 12, 2025

டெல்லி குண்டுவெடிப்புக்கு தலிபான் கண்டனம்

image

டெல்லி குண்டுவெடிப்புக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு தங்கள் ஆறுதலை தெரிவித்துள்ள அவர்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளனர். இதேபோல் அர்ஜெண்டினா, வங்கதேசம், உக்ரைன், சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகள் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.

error: Content is protected !!