News January 14, 2025
பும்ராவுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: கபில்தேவ்

பும்ராவுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என கபில்தேவ் அறிவுறுத்தியுள்ளார். ஒரு தலைமுறை வீரரை, மற்றொரு தலைமுறையுடன் ஒப்பிட முடியாது எனவும், தற்போதுள்ள வீரர்கள் ஒருநாளைக்கு 300 ரன்கள் எடுக்கின்றனர், ஆனால் தங்கள் காலத்தில் அப்படி இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். சில முக்கிய வீரர்களை தவிர்த்துவிட்டு, ENG எதிரான தொடரில் IND அணியை தேர்வு செய்த தேர்வுக்குழுவையும் விமர்சிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
2026 IPL ஏலம் அறிவிப்பை வெளியிட்ட BCCI

IPL அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், மினி ஏலம் குறித்த அறிவிப்பை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் மினி ஏலம் நடைபெற உள்ளது. 173 வீரர்களை IPL அணிகள் தக்க வைத்த நிலையில், மீதமுள்ள 77 வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. மொத்த அணிகளிடமும் சேர்த்து ₹237.55 கோடி தொகை உள்ளது. ஒரு அணி அதிகபட்சமாக 25 வீரர்களை கொண்டிருக்கலாம்.
News November 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 16, ஐப்பசி 30 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: சதயம் ▶சிறப்பு: முகூர்த்த நாள். விஷ்ணுபதி புண்ணிய காலம், ஞாயிறு வழிபாட்டு நாள். ▶வழிபாடு: ஆதித்ய ஹிருதயம் சொல்லி சூரியனை வழிபடுதல்.
News November 16, 2025
BJP, EC கூட்டு சதியை முறியடிக்க வேண்டும்: திருமா

BJP-ன் வாக்கு திருட்டை தடுப்பதற்கு TN மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் முடிவுகளானது BJP, EC கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்ததுபோல TN-ல் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் இருக்கவும், BJP, EC-ன் கூட்டு சதியை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


