News October 11, 2025
Colgate பேஸ்ட் யூஸ் பண்றீங்களா.. உஷாரா இருங்க!

பலரது வீட்டிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் Colgate பேஸ்ட்டுக்கும் மார்க்கெட்டில் போலிகள் வந்துவிட்டன. அதே Label, அதே Taste-ல் இருக்கும் இந்த Paste-கள் போலி என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை. குஜராத்தில் பேக்டரி அமைத்து இந்த மோசடியில் ஈடுப்பட்ட நால்வரை போலீஸ் தேடி வருகிறது. தற்போது வரை, ₹9.43 லட்சம் மதிப்பிலான போலி Colgate பேஸ்ட் & உபகாரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இனி கொஞ்சம் உஷாரா இருங்க!
Similar News
News December 16, 2025
நாசருக்கு கலைஞர் விருதை வழங்கிய CM ஸ்டாலின்

சென்னையில் முத்தமிழ் பேரவையின் சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் நாசருக்கு கலைஞர் விருதை வழங்கி CM ஸ்டாலின் கௌரவித்தார். பின்னர் பேசிய CM, கலைஞர் விருது பெறுவதற்கு நாசர் மிகமிக பொருத்தமானவர் என கூறினார். தொடந்து பேசிய நாசர் கலையை ஆழமாக பயன்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை இந்த விருது கொடுத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன்
தெரிவித்தார்.
News December 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 16, மார்கழி 1 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News December 16, 2025
எல்லா வீரர்களும் VHT-ல் விளையாட வேண்டும்: BCCI

விஜய் ஹசாரே கோப்பை(VHT) டிச.24-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் தேசிய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே விராட், ரோஹித் VHT-ல் கலந்துகொள்ள பிசிசிஐ கூறியிருந்த நிலையில், இப்போது அது அனைவருக்கும் பொருந்தும் என அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயஷ் ஐயருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


