News November 29, 2024

தனிமையில் இனிமை காணுபவரா நீங்கள்?

image

Gen Zல் Im a lonley person என தம்பட்டம் அடிப்பவர்கள் தற்போது அதிகமே. இதில், தவறில்லை. ஆனால், எப்போதும் தனியாக இருப்பதும் நல்லதல்ல. மனதில் இருக்கும் விஷயத்தை வெளிப்படையாக பேச பழகுங்கள். பேசினால் எல்லாவற்றிக்கும் ஏதோ ஒரு தீர்வு கிடைக்கும். முக்கியமாக, ஒருத்தர் ஏமாற்றியதற்கு அனைவரையும் வெறுக்காதீர்கள். மனிதனை நம்புங்கள், நீங்களும் நம்பிக்கைக்கூறியவராக இருங்கள். கூடி வாழ்வது தானே கோடி நன்மை?

Similar News

News November 19, 2025

விஜய் RSS சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டவர்: அப்பாவு

image

SIR-க்கு எதிராக தவெக நடத்திய போராட்டம் வெறும் கண்துடைப்பு என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். உண்மையில் SIR எதிர்ப்பதாக இருந்தால் விஜய் SC-ல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் விஜய் RSS சித்தாந்தத்துடன் ஒன்று பட்டுள்ளதாகவும், இருவரும் ஒன்றாக இணைவார்கள் எனவும் கூறியுள்ளார். SIR-க்கு எதிராக விஜய் போட்ட வீடியோவில் மத்திய அரசை விமர்சிக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.

News November 19, 2025

டிஜிட்டல் தங்கத்தின் விலை 61% குறைவு

image

தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்கள் குறைந்த விலையில் முதலீடு செய்யலாம் என சொல்லி டிஜிட்டல் தங்க விற்பனையை அதிகரித்தன. இதனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை ₹1,410 கோடியாக இருந்தது. ஆனால் இந்த முதலீடு ஆபத்தானது என பொருளாதார நிபுணர்கள் மக்களை எச்சரித்தனர். இதனால் அக்டோபர் மாதத்தில் டிஜிட்டல் தங்க விற்பனை ₹550 கோடியாக சரிந்துள்ளது.

News November 19, 2025

மேகதாது விவகாரத்தில் CM-க்கு கவலையில்லை: RB உதயகுமார்

image

மேகதாது அணை விவகாரத்தில் CM ஸ்டாலின் மெத்தனமாக செயல்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது விவகாரத்தை பற்றி கவலைப்படாமல், SIR-க்கு போராட்டம் நடத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார். தனது சகோதரரான ராகுல்காந்தி மூலம் சித்தராமையாவுக்கு ஸ்டாலின் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

error: Content is protected !!