News March 21, 2024
தேமுதிக உத்தேச வேட்பாளர் பட்டியல்

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. கடலூரில் முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து, மத்திய சென்னையில் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி (அ) மாவட்ட செயலாளர் பிரபாகரன், திருவள்ளூரில் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி, தஞ்சையில் டாக்டர் ராமநாதன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News February 16, 2026
நம்பிக்கையில்லா தீர்மானம்… மார்ச் 9-ம் தேதி ஓட்டெடுப்பு

லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்நிலையில் இதற்கான ஓட்டெடுப்பு வரும் மார்ச் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி,118 MP-க்கள் கையெழுத்திட்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
News February 16, 2026
சுஜாதா பொன்மொழிகள்

*நேரம் ஒரு நதி போன்றது. நீங்கள் ஒரே நீரை இருமுறை தொட முடியாது. *அறிவு என்பது தெரிந்தவற்றை அடுக்கி வைப்பது அல்ல, தெரியாதவற்றைத் தேடிச் செல்வது. *பெண்களின் மெளனம் பல சமயம் சம்மதம் அல்ல, அது ஒரு பெரிய போராட்டத்தின் முடிவு. *நவீன உலகம் என்பது வசதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, சிக்கல்களின் தொகுப்பும்தான். *வாசிப்பு என்பது மூளைக்குச் செய்யும் உடற்பயிற்சி.
News February 16, 2026
பொய் பேசுவது ராகுலின் கொள்கை: அமித்ஷா

விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதாக ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதில் அளித்துள்ளார். அதில் இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சிறு பாதிப்பு கூட ஏற்பாடாது என அவர் கூறியுள்ளார். மேலும், ராகுல் பொய் பேசுவதை கொள்கையாக கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டு ஒப்பந்தங்களால் விவசாயிகள் பலிகடா ஆக்கியதாகவும் சாடியுள்ளார்.


