News September 4, 2025
தீபாவளி பரிசு.. ₹18 ஆயிரம் வரை விலை குறைப்பு

தீபாவளி பரிசாக 1,200cc-க்கும் குறைவான கார்கள், 350cc மற்றும் அதற்கு கீழான இரு சக்கர வாகனங்களுக்கான GST வரி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த GST வரி மாற்றம் காரணமாக, இனி ₹10 லட்சத்திற்கு கார் வாங்கினால், ஒரு லட்சம் வரையும், ₹2.50 லட்சத்திற்கு பைக் வாங்கினால் ₹15- ₹18 ஆயிரம் வரையும் விலை குறையும். புதிய GST வரி செப்.22ல் அமலுக்கு வருகிறது. அதுவரை கார், பைக் வாங்குவோர் பொறுத்திருங்கள்.
Similar News
News November 8, 2025
BREAKING: ரஜினிகாந்த் அண்ணனுக்கு மாரடைப்பு

நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை பெங்களூருவில் இருக்கும் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். தனது சகோதரர் சீரியஸாக இருப்பதை அறிந்ததும், அவரை சந்திக்க ரஜினி பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது. சினிமா கரியரில் ரஜினியை வழிநடத்திய முக்கிய நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 8, 2025
வாக்காளர் கணக்கெடுப்பில் குழப்பமோ குழப்பம்

SIR பணிகள் ஆரம்ப நிலையிலேயே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. SIR படிவம் விநியோகம் செய்வதில் குழப்பம் நீடிப்பதாகவும், பல இடங்களில் படிவம் விநியோகம் செய்யும் பணியே துவங்கவில்லை எனவும் வாக்காளர்கள் கூறுகின்றனர். மேலும், போதுமான பயிற்சி இல்லாததால், படிவம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திணறி வருவதாகவும் புகார் கூறுகின்றனர்.
News November 8, 2025
தமிழகம் முழுவதும் தியாகச் சுவர்: அமைச்சர் மா.சு

உடல் உறுப்பு கொடையாளர்களை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தியாகச் சுவர் எழுப்பப்படும் என்று அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார். CM ஸ்டாலின் எந்த ஒன்றையும் சொல்வதற்கு முன்னால் தாமே செய்து காட்டும் மிகச் சிறந்த மானுடப் பண்பில் உயர்ந்தவர்; அந்த வகையில் ஸ்டாலின் 2009-ம் ஆண்டே உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். இதுபோன்று ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


