News April 10, 2024
விவாகரத்தான பெண்களுக்கு இந்த உரிமை கிடையாது

விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தாெடுக்க முடியாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர், விவாகரத்தான 6 மாதத்துக்கு பிறகு அளித்த புகாரை வைத்து பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் 142 பிரிவு அதிகாரத்தை பயன்படுத்தி, முன்னாள் கணவருக்கு எதிரான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Similar News
News December 10, 2025
டிஜிட்டல் முறைக்கு மாறும் அரசியல் கட்சிகள்

அதிமுகவின் பொதுக்குழு & செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், கூட்டத்தில் நடப்பவை பற்றி தெரிந்து கொள்ள Whatsapp சேனல் ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கான QR Code பதாகை முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெக பொதுக்கூட்டத்துக்கு QR Code மூலம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டத்துக்கு இப்படி ஒரு முன்னேற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 10, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியுள்ளது

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்து ₹96,240-க்கும், கிராமுக்கு ₹30 உயர்ந்து ₹12,030-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த 10 நாள்களுக்கும் மேல் ஆபரணத் தங்கத்தின் விலை ₹96 ஆயிரத்திற்கும் கீழ் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News December 10, 2025
இந்திய அணியின் பெஸ்ட் T20 கேப்டனான SKY!

T20I போட்டிகளில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட இந்திய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் (80%) திகழ்கிறார். அவர் இவர் தலைமையில் 35 போட்டிகளில் விளையாடி இந்திய அணி, 28-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையிலும், ஒரு போட்டி மழையால் ரத்தானது. இந்த பட்டியலில் ரோஹித் (79.83%) 2-வது இடத்திலும், கோலி (64.58%) 3-வது இடத்திலும் உள்ளனர். பேட்டிங்கில் சொதப்பினாலும், கேப்டனாக ஜொலிக்கிறார் SKY!


