News August 4, 2024
உள் ஒதுக்கீடு தீர்ப்பை ஏற்கவில்லை: மாயாவதி

பட்டியலின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம், என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், தலித் உரிமைகளை தனது கொள்கையாக முன்னிறுத்தும் பகுஜன் சமாஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் மாயாவதி, பட்டியலின மக்களுக்குள் உட்பிரிவுகளை ஏற்படுத்துவது சரியல்ல என்று கூறியுள்ளார்.
Similar News
News January 13, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News January 13, 2026
மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம்

<<18842248>>இலங்கை கடற்படை<<>> சிறைப்பிடித்த 10 ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க தூதரக ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 13, 2026
OPS போன்றே கூட்டணி பற்றி பேசிய பிரேமலதா

கூட்டணி தொடர்பாக தேமுதிக மா.செ.க்களை மீண்டும் அழைத்து பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பை வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைத்தார். இதற்கு காரணம் ஏற்கெனவே, நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பலர் தவெக, சிலர் அதிமுக என விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், OPS போன்றே தை பிறந்தால் வழி பிறக்கும் என பிரேமலதா கூறியுள்ளார்.


