News March 21, 2024
ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய இயக்குநர் ராஜமௌலி

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இயக்குநர் ராஜமௌலி சிக்கியதாக அவரது மகன் கார்த்திகேயா X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28ஆவது மாடியில் இருந்த போது, தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. நாங்கள் அனைவரும் பயத்தில் இருந்தோம்” என தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை வந்த குறுஞ்செய்தியை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.
Similar News
News March 12, 2026
மனைவியை காக்க வக்கில்ல.. விஜய் மீது அட்டாக்?

சினிமாவிலிருந்து வந்திருக்கிறேன் என சொல்பவர்கள், பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவருவதாக நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார். விஜய்யை மறைமுகமாக சாடிய அவர், கட்டிய மனைவியை காப்பாற்ற வக்கில்லாதவர் எல்லாம் பெண்களை காப்பாற்றுவாரா என கேட்டுள்ளார். மேலும், ஜெ., இருந்திருந்தால் கண்டவரெல்லாம் பேசும் நிலை வந்திருக்குமா எனவும், ஜெ., வழியை பின்பற்றும் தலைவரை அதிமுக பெற்றிருப்பதாகவும் பேசியுள்ளார்.
News March 12, 2026
போருக்கு நடுவிலும் சீனாவுக்கு சப்ளையை நிறுத்தாத ஈரான்

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான், அதன் ஏற்றுமதியை மட்டும் நிறுத்தவில்லை. போர் தொடங்கியதிலிருந்து அதன் முக்கிய இறக்குமதியாளரான சீனாவிற்கு சுமார் 12 மில்லியன் பேரல்கள் எண்ணெயை அனுப்பியுள்ளது. அமெரிக்கா & இஸ்ரேல் மீது அழுத்தத்தை அதிகரிக்க ஹார்முஸை ஆயுதமாகப் பயன்படுத்தும் ஈரான், இந்தியா உள்பட பல நாடுகளின் எண்ணெய் கப்பல்களை தடுத்து நிறுத்தியுள்ளது.
News March 12, 2026
தமிழக தேர்தல் தேதி.. முக்கிய தகவல் வெளியானது

TN உள்ளிட்ட 5 மாநிலங்களின் பேரவைத் தேர்தல் தேதிகளை நிர்ணயிக்க டெல்லியில் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் TN, புதுவை, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அட்டவணை குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 20-க்கு பிறகு வாக்குப்பதிவும், மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கைக்கும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


