News September 3, 2025
Die Hard பட நடிகர் காலமானார்

ஹாலிவுட் நடிகர் கிரஹாம் கிரீன்(73) காலமானார். இவர் நடிப்பில் வெளியான Die Hard with Vengeance, The Twilight Saga: New Moon உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. 1990-ல் வெளியான Dances With Wolves படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிரஹாம் கிரீன் மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
Similar News
News November 7, 2025
₹4 லட்சம் ஜீவனாம்சம் போதாது: ஷமி EX மனைவி

ஷமி மாதாமாதம் கொடுக்கும் ₹4 லட்சம் ஜீவனாம்சத்தை உயர்த்தி கொடுக்க வலியுறுத்தி, அவரது EX மனைவி ஹசின் ஜஹான் SC-ல் மனுத்தாக்கல் செய்துள்ளார். கோடிகளில் சம்பாதிக்கும் ஷமி, சிறு தொகையையே ஜீவனாம்சமாக வழங்குவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விசாரித்த கோர்ட், ₹4 லட்சம் பெரிய தொகை இல்லையா என கேள்வி எழுப்பினாலும், இது குறித்து விளக்கம் அளிக்க ஷமி, மே.வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
News November 7, 2025
அதிமுக + விஜய் கூட்டணி… முடிவை அறிவித்தார்

விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக உறுதியாக இருப்பதை RB உதயகுமார் மீண்டும் பதிவு செய்துள்ளார். எல்லா கட்சிகளும் அறிவிப்பது போல தவெகவும் CM வேட்பாளரை அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மெகா கூட்டணியை EPS அமைப்பார் எனத் தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் RB உதயகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் மெகா கூட்டணியில் தவெக இடம்பெறுமா?
News November 7, 2025
2032-ல் 9 நாடுகள் பாதிக்கப்படலாம்

2032-ஆம் ஆண்டில் ஒரு சிறுகோள் நமது சூரிய மண்டலத்தின் வழியாக செல்ல உள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த சிறுகோள் பூமியை பாதுகாப்பாக கடந்து செல்ல 97.9% வாய்ப்பு உள்ளது. இருப்பினும், 2.1% மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. அதன்படி, மோதல் ஏற்பட்டால், எந்தெந்த நாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.


