News August 20, 2024
தேவநாதனின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. நிதி நிறுவன வங்கிக் கணக்கையும் பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் முடக்கியுள்ளனர். நிதி நிறுவனம் மீது இதுவரை 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்த நிலையில், அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, அவரது தொலைக்காட்சி (WIN TV) நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 24, 2026
பாகிஸ்தான் பனிச்சரிவில் ஒரு குடும்பமே அழிந்தது

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்வா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பச்சா கான், அவரது மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் & 2 மருமகள்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சுவாச பிரச்னைகளால் அவதிப்படுவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
News January 24, 2026
தமிழில் தெரியாத ஒரே வார்த்தை ’பயம்’: சீமான்

வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவன்தான் வீரன் என சீமான் கூறியுள்ளார். வெற்றியடைந்தால் இருப்பேன் தோல்வியடைந்தால் சென்றுவிடுவேன் என்பவன் கோழை என்று பேசிய அவர், தங்களுக்கு தெரியாத மூன்றெழுத்து ’பயம்’ என பேசியுள்ளார். மேலும், தங்கள் பரம்பரைக்கே தெரிந்த மூன்றெழுத்து ’வீரம்’ எனவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க..
News January 24, 2026
உங்கள் பெண் குழந்தைகளை இப்படி வளருங்க!

பெண் குழந்தைகளை கொண்டாடினால் மட்டும் போதுமா? அவர்களை மதிக்கவும் வேண்டும் என்பதற்காகவே இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு மகள் பிறந்தால் ஒரு குடும்பம் மட்டுமல்ல, சமூகமே வளருகிறது. அவர்களுக்கு அனைத்திலும், சம பங்கு, சம உரிமை, கல்வி, பாதுகாப்பு, மரியாதையை கொடுத்து பழகுங்கள். அவளின் அந்த சிரிப்பும், குழந்தைத்தனமும் என்றும் மறையாமல் ஒரு நல்ல சமூகமாக பார்த்துக்கொள்வோம். Happy National Girl Child Day!


