News April 17, 2024
டெல்லி அணி அபார வெற்றி

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் முதலில் விளையாடிய GT, 89 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக ரஷித் கான் 31 ரன்கள் எடுத்தார். DC தரப்பில் முகேஷ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய DC அணி, 8.5 ஓவர்களில் 92/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜாக் 20 ரன்கள் எடுத்தார். GT தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
Similar News
News November 13, 2025
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (நவ.13) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை இறக்கத்துடனே காணப்படுகிறது. சென்செக்ஸ் 100 புள்ளிகள் குறைந்து 84,366 புள்ளிகளிலும், நிஃப்டி 32 புள்ளிகள் குறைந்து 25,843 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. Ashok Leyland, P&G, Vedanta ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், ONGC, Orient உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
News November 13, 2025
டெல்லியில் மீண்டும் வெடிச்சத்தம்!

டெல்லி, மஹிபால்பூர் பகுதியில் காலை 9.18 மணிக்கு சக்தி வாய்ந்த வெடி சத்தம் கேட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கடந்த 10-ம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இன்னொரு வெடிச்சத்தம் கேட்டுள்ளது. ஆனாலும், இந்த சம்பவத்தின் முழு விவரம் இதுவரை வெளியாகவில்லை.
News November 13, 2025
ECI மீது BJP MLA வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

முறையாக வீடுதோறும் சென்று SIR படிவங்களை பூத் லெவல் ஆபிசர்கள் (BLO) கொடுப்பதில்லை என வானதி குற்றம்சாட்டியுள்ளார். ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு விண்ணப்பங்கள் கொடுப்பதாகவும், முறையாக ஆய்வுசெய்து, படிவத்தை அதற்குரிய வெப்சைட்டில் ஸ்கேன் செய்வது இல்லை என்றும் சாடியுள்ளார். ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என சோதிப்பது இல்லை எனவும் அதிகாரிகளுக்கு சரியான பயிற்சி அளிக்கப்படவில்லை எனவும் சாடியுள்ளார்.


