News August 19, 2024
தலைவர் பதவி கிடைக்காததால் விமர்சனமா? K.C. பதில்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காததால் செல்வப்பெருந்தகையை விமர்சிப்பதாக கூறப்படுவது குறித்து கார்த்தி சிதம்பரம் (K. C) விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மாநில தலைவர் பதவிக்கு தாம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்று கூறினார். 3 ஆண்டுக்கு செல்வப் பெருந்தகை தலைவராக செயல்படுவார். அவர் நன்றாக செயல்படுகிறார் என்று K. C. குறிப்பிட்டார்.
Similar News
News January 18, 2026
BREAKING : இந்தியா அதிர்ச்சி தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ODI-ல் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த NZ, டேரில் மிட்செல், ஃபிலிப்ஸின் சதத்தால் 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய IND, 75 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. விராட் கோலி சதம் அடித்து போராடினாலும், 296 ரன்களுக்கு IND ஆல் அவுட்டானது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் ODI தொடரை நியூசிலாந்து வென்றுள்ளது
News January 18, 2026
பெரியாரை திட்டி திட்டியே…. மாரி செல்வராஜ்

பெரியாரை திட்டுவதன் மூலம் ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆக முடியாது என இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியுள்ளார். தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் அவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. அப்போது, பெரியாரை படித்து விட்டு, அவரை திட்டி திட்டியே எளிதாக பிரபலமாகலாம். ஆனால் ஆசானை ஜெயிப்பது என்பது அவரிடம் இருந்து பாராட்டு பெறுவது தானே தவிர, அவரை குறைசொல்லி அல்ல எனவும் கூறியுள்ளார்.
News January 18, 2026
PM மோடியை வழிநடத்தும் தர்மம் : மோகன் பகவத்

தர்மத்தின் மூலமாகவே உலகின் விஸ்வகுருவாக இந்தியாவால் உருவெடுக்க முடியும் என மோகன் பகவத் கூறியுள்ளார். தர்மம் என்ற வாகனத்தில் பயணித்தால் யாருக்கும் விபத்து ஏற்படாது என்றும், அதே ஆற்றல் தான் தன்னை, PM மோடி மற்றும் பொதுமக்களை வழிநடத்துவதாக அவர் குறிப்பிட்டார். ஒரு நாடு மதச்சார்பின்மையாக இருக்கலாம், ஆனால் தர்மத்தை பின்பற்றாமல் வாழ முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


