News October 1, 2025
அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

2023-ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் 1,77,335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022-ஐ காட்டிலும் 9.2% அதிகம் என NCRB அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, ஒரு லட்சம் குழந்தைகளில் 39.9 பேர் குற்றங்களுக்கு உள்ளாவதாக அறிக்கை கூறுகிறது. 2021-ல் 1,49,404 குற்ற வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2022-ல் 1,62,449 ஆக உயர்ந்திருந்தது.
Similar News
News December 12, 2025
நாளை பள்ளிகள் இயங்கும்.. அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் நாளை(டிச.13) அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் கடந்த வாரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடுசெய்யும் விதமாக, வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் இதேபோன்று அறிவிப்பு வெளியாகலாம்.
News December 12, 2025
ஒரு கூட்டு கிளியாக.. அண்ணன் தம்பினா இப்படி இருக்கணும்

வயதான பெற்றோரை சிலர் புறக்கணிக்கும் இக்காலத்தில், தாயை நான் தான் கவனிப்பேன் என சகோதரர்கள் பாச போராட்டம் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் சவுதி அரேபியாவில் நடந்துள்ளது. வேலைக்கு செல்லாமல் இருக்கிறார் அண்ணன். தம்பியோ, பண வசதியுடன் வேலையிலும் இருக்கிறார். ஆனால், ‘இரு மகன்களும் எனது இரு கண்கள்’ என்றார் பாசத் தாய். இறுதியில் பண வசதியுடன் உள்ள தம்பியிடமே உரிமையை ஒப்படைக்கிறது கோர்ட். நீங்க என்ன சொல்றீங்க?
News December 12, 2025
மேகதாது அணை: குழுவை அமைத்தது கர்நாடகா

மேகதாது அணை திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள 30 அதிகாரிகள் கொண்ட குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது. முன்னதாக, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு SC அனுமதி அளித்தது. அத்துடன், தமிழக அரசின் கருத்தை கேட்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.


