News August 22, 2024

சர்ச்சை: அபராதம் கட்டும் விஜய்

image

TVK கொடி அறிமுக விழாவிற்கு அபராதம் கட்டாத சொகுசு காரில் விஜய் வந்தது சர்ச்சையாகி உள்ளது. TN 37 DR 1111 என்ற எண் கொண்ட Toyota innova crysta கார், விதி மீறல்களில் ஈடுபட்டதாக ₹4,500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அத்தொகை இன்னும் செலுத்தப்படவில்லை. அபாரத தொகை நிலுவையில் உள்ள நிலையில், அந்த காரில் விஜய் பயணித்துள்ளார். இச்செய்தி வைரலான நிலையில், அபராதத்தை செலுத்த அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Similar News

News November 16, 2025

2026 IPL ஏலம் அறிவிப்பை வெளியிட்ட BCCI

image

IPL அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், மினி ஏலம் குறித்த அறிவிப்பை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் மினி ஏலம் நடைபெற உள்ளது. 173 வீரர்களை IPL அணிகள் தக்க வைத்த நிலையில், மீதமுள்ள 77 வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. மொத்த அணிகளிடமும் சேர்த்து ₹237.55 கோடி தொகை உள்ளது. ஒரு அணி அதிகபட்சமாக 25 வீரர்களை கொண்டிருக்கலாம்.

News November 16, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 16, ஐப்பசி 30 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: சதயம் ▶சிறப்பு: முகூர்த்த நாள். விஷ்ணுபதி புண்ணிய காலம், ஞாயிறு வழிபாட்டு நாள். ▶வழிபாடு: ஆதித்ய ஹிருதயம் சொல்லி சூரியனை வழிபடுதல்.

News November 16, 2025

BJP, EC கூட்டு சதியை முறியடிக்க வேண்டும்: திருமா

image

BJP-ன் வாக்கு திருட்டை தடுப்பதற்கு TN மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் முடிவுகளானது BJP, EC கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்ததுபோல TN-ல் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் இருக்கவும், BJP, EC-ன் கூட்டு சதியை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!