News May 1, 2024

உணவு முறையை மாற்றினால் மலச்சிக்கலுக்கு தீர்வு காணலாம்

image

சிறியவர் முதல் பெரியவர் வரை நாள்தோறும் சந்திக்கும் பிரச்னை மலச்சிக்கலாகும். அன்றாடம் நாம் கடைபிடிக்கும் உணவு முறையை மாற்றினால், இதற்கு தீர்வு காண முடியும். தண்ணீர் அதிகம் அருந்துவதாலும், இரவு நேரத்தில் பழங்களை அதிகம் உட்கொள்வதாலும் தீர்வு காணலாம். எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து முளைகட்டிய தானியங்கள், சிறுதானிய உணவுகளை உண்பதாலும் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

Similar News

News December 15, 2025

சற்றுமுன்: இன்று ஒரே நாளில் விலை ₹5,000 உயர்ந்தது

image

<<18572433>>தங்கம்<<>> விலைக்கு சற்றும் சளைக்காமல் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 1 கிலோ வெள்ளி இன்று மட்டும் ₹5,000 அதிகரித்திருப்பது சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வெள்ளி 1 கிராம் ₹215-க்கும், 1 கிலோ ₹2.15 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர் விலையேற்றம் கண்டு வரும் வெள்ளி, கடந்த 1 வாரத்தில் மட்டும் கிலோவுக்கு ₹17,000 உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News December 15, 2025

ரீ-ரிலிஸில் வசூலை வாரிகுவிக்கும் ‘படையப்பா’

image

கடந்த 12-ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘படையப்பா’ படம் வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி 3 நாள்கள் ஆன நிலையில், தற்போது வரை இப்படம் தமிழகத்தில் மட்டும் ₹4 கோடியும், வெளிமாநிலங்கள் & வெளிநாடுகளில் ₹2 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் போலவே ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற இடங்களிலும் படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 15, 2025

இந்த எண்களை பெண்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்!

image

பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு பல அவசர உதவி எண்களை கொடுத்துள்ளது. பின்வரும் இந்த எண்களை அனைத்து பெண்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் ★தேசிய பெண்கள் ஆணையம் – 181 ★பெண்கள் காவல் உதவி எண் – 1091 ★குழந்தைகள் உதவி எண் – 1098 ★அமிலத் தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கான உதவி – 07533066009 ★சைபர் குற்ற உதவி எண் – 1930. அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டிய இந்த பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!