News October 17, 2025
ஆணவ கொலைகளை தடுக்க ஆணையம்: VCK வரவேற்பு

ஆணவ கொலைகளை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதை வரவேற்பதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளின்படி சட்டம் இயற்றப்படும் என பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்று பாராட்டுவதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 11, 2025
டெல்லி சம்பவம்… பின்னணியில் காங்கிரஸா? பொன்னார்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அங்கு குண்டுவைத்தது காங்கிரஸ்காரர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிய அவர், இன்னும் 2 நாள்களில் இதுபற்றி தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார். இதில் காங்கிரஸிற்கு என்ன ரோல்? குறிப்பாக ராகுல் காந்திக்கு என்ன ரோல்? என்பதெல்லாம் வெளிவரும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News November 11, 2025
Delhi Blast: NIA விசாரணை தொடக்கம்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் விசாரணை NIA-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ள இச்சம்பவத்தை அனைத்து கோணங்களிலும் டெல்லி போலீஸ் விசாரித்து வந்தது. இதில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், வழக்கினை NIA-விற்கு உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது. டெல்லி போலீஸ் சேகரித்த ஆதாரங்களை பெற்றுள்ள NIA, விரைவில் முதற்கட்ட தகவல் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.
News November 11, 2025
Richest Women Cricketer – இந்தியாவில் 3 பேர்

உலகின் முன்னணி பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் ஆண்களுக்கு நிகராக தங்களது திறமையை செல்வமாக மாற்றுகிறார்கள். இந்தப் பட்டியலில், இந்திய வீராங்கனைகள் 3 பேர், டாப் 10-ல் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். அவர்கள் யார், அவர்களது சொத்து மதிப்பு என்ன என்று தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த வீராங்கனை யார்?


