News June 19, 2024
4 பேர் மரணத்தில் ஆட்சியர் புதிய தகவல்

கள்ளச்சாராயத்தால் இறந்ததாக கூறப்படும் 4 நபர்களும் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் புதிய தகவல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்படவுள்ளது. முழு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கள்ளச்சாராயத்தால் இறப்பா என உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
சொன்னதும் கிடைச்சது, அதற்கு மேலும் கிடைச்சது!

பிஹார் தேர்தல் முடிவு குறித்த அமித்ஷாவின் கணிப்பு, தற்போது பேசுபொருளாகி உள்ளது. NDA கூட்டணி எவ்வளவு தொகுதிகள் வெல்லும் என்று அவரிடம் கேட்ட போதெல்லாம், 160 நிச்சயம், 160+ லட்சியம் என்பது போல 160+ எனப் பதிலளித்தார். ஆனால், தேர்தல் முடிவோ அவரது கணிப்பையும் கடந்து, 203 இடங்களில் தற்போது முன்னிலையில் நிற்கிறது. இதை குறிப்பிட்டு பலரும், அமித்ஷா சரியாக தான் சொன்னார் என SM-ல் பதிவிட்டு வருகின்றனர்.
News November 14, 2025
சிறுவயதிலேயே குழந்தைகள் சந்திக்கும் பிரச்னை; ALERT!

பீட்சா, பர்கர், சாக்லேட் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை அதிகரித்துள்ளது. இதனால் நாளடைவில் நீரிழிவு, High BP, இதயநோய் மற்றும் மனநல பிரச்னைகள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனை தவிர்க்க, காய்கறி, பழம், மீன் போன்ற ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றை அவர்கள் பின்பற்ற வேண்டும். குழந்தைகளை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 14, 2025
பற்களின் கறையை நீக்கும் தேங்காய் எண்ணெய்

நாம் தினமும் பற்களை துலக்கினாலும் உட்புறத்தில் மஞ்சள் கறை படிந்து இருக்கும். அதை எளிதாக நீக்க, வீட்டில் இருக்கும் சமையல் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் போதும். ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 2 ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அதை பிரஸ் மூலம் பற்களில் நன்றாக தேய்த்தால் கறை நீங்கிவிடும்.


