News August 22, 2025

காபி பிரியர்களே உஷார்!

image

தினசரி 2 கப் காபி குடிப்பது உடல்நலனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதுதான் இதுவரை டாக்டர்கள் பரிந்துரைத்தது. ஆனால், காபி குடிப்பது உடல் சத்துகளை உட்கவர்வதை பாதிப்பதாக, அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது. காபியில் உள்ள சில உட்பொருள்கள், நமது உணவிலிருந்து இரும்பு, வைட்டமின் பி, சி, டி, சத்துகள் உட்கவர்வதை தடுக்கிறது. மேலும், நெஞ்சரிச்சலையும் காபி அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது. SHARE IT!

Similar News

News January 18, 2026

வாசிப்பு மூலம் அறிவுத் தீ பரவ வேண்டும்: CM ஸ்டாலின்

image

கலைவாணர் அரங்கில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், CM ஸ்டாலின் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார். மேலும், வாசிப்பு மூலம் அறிவுத் தீ வீடுகள்தோறும் பரவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அறிவு பரிமாற்ற நிகழ்வாகவே பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெறுவதாகவும், தொழில் முதலீட்டுக்கு மட்டுமல்ல, அறிவை பகிர்ந்து கொள்ளவும் TN சிறந்த மாநிலமாகும் என்றும் குறிப்பிட்டார்.

News January 18, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தை கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 18, 2026

தவெகவில் இணைய திட்டமா? மாணிக்கம் தாகூர் விளக்கம்

image

திமுக கூட்டணியில் இருந்து காங்.,-ஐ வெளியேற்ற போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததால், மாணிக்கம் தாக்கூர், பிரவீன் சக்ரவர்த்தி கட்சியில் இருந்து விலகப்போவதாக SM-ல் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், அந்த தகவலை எக்ஸ் தளத்தில் டேக் செய்து பதிலளித்துள்ள மாணிக்கம் தாகூர், ‘அல்றசில்ற ITwing கனவு பலிக்காது கண்ணா’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் உண்மையான காங்கிரஸ்காரன் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!