News January 12, 2025

சீமான் சர்ச்சை பேச்சால் நாதகவில் வெடித்த மோதல்

image

பெரியார் தொடர்பாக சீமானின் சர்ச்சை கருத்தால், நாதகவிற்குள் மோதல் வெடித்துள்ளது. நாதக மாநில ஒருங்கிணைப்பாளரான ஜெகதீச பாண்டியன், பெரியார் குறித்து சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே தவிர, நாதகவின் ஒட்டு மொத்த கருத்த அல்ல. அவரின் பேச்சு இந்துத்துவா வளர்ச்சிக்கு உதவுமே தவிர, தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது என சாடியுள்ளார். சீமான் பேச்சு குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?

Similar News

News November 9, 2025

வாவ்.. எப்பேர்ப்பட்ட சிந்தனை!

image

இந்த போட்டோக்களை சட்டென பார்த்தால், ஒரே படம் போல தான் தெரியும். ஆனால், அவை இருவேறு போட்டோக்களாகும். இரண்டு படங்களை கரெக்ட்டாக ஒன்றிணைத்து, உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளார், Fontanesi என்ற கலைஞர். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து, அடுத்தடுத்த போட்டோக்களை பார்க்கவும். இத நீங்க மட்டும் ரசிக்காம, நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. இவற்றில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எது?

News November 9, 2025

BREAKING: டிஜிட்டல் தங்கம்.. செபி விடுத்த வார்னிங்!

image

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது சமீபமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இது ஆபத்தானது என்று செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. செபி என்பது இந்தியாவில் பங்குச்சந்தை மற்றும் முதலீட்டாளர்களின் நலனை காக்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பு. டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோருக்கு எந்தவித சட்ட பாதுகாப்பும் இல்லை என்று கூறியுள்ள செபி, இந்த முதலீடு செபியின் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்றும் எச்சரித்துள்ளது.

News November 9, 2025

தொடரும் கொடூரம்: 4 வயது சிறுமிக்கு வன்கொடுமை

image

மே.வங்கத்தில் கடந்த சில மாதங்களாக தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், கொல்கத்தா ஹூக்லி நகரின் தாரகேஷ்வர் ரயில் நிலையத்தில், பாட்டியுடன் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி மீட்கப்பட்ட நிலையில், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

error: Content is protected !!