News August 20, 2024
சினிமா + அரசியல்?: விஜய் சொன்ன அந்த விஷயம்

அரசியலில் பயணித்து கொண்டே சினிமாவில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா என கேட்ட போது, நடிகர் விஜய் சிரித்து விட்டு பார்க்கலாம் என கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். விஜயை திரையில் பார்ப்பது தன்னை போன்ற ஒரு சாதாரண ரசிகனின் ஆசை எனவும், இருப்பினும் அவரது முடிவுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். ‘தளபதி 69’ படத்துடன் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.
Similar News
News January 12, 2026
அதிமுக கூட்டணியில் அமமுக இணைகிறதா?

அதிமுக கூட்டணியில் இன்னும் ஓரிரு நாள்களில் புதிய கட்சிகள் இணையும் என EPS தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க பாஜக தலைமையிடம் EPS சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோளிங்கர், பாபநாசம், ஆண்டிப்பட்டி, சாத்தூர், தாம்பரம் உள்ளிட்ட 7 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
News January 12, 2026
அழகின் ஒளியாக ஆஷிகா ரங்கநாத்

‘சர்தார் 2’ திரைப்படத்தில் நடிக்கும் ஆஷிகா ரங்கநாத், பட்டொளி வீசும் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், ஊசி குத்தும் பார்வையாலும், சர்க்கரை தடவிய சிரிப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். கண் இமை உறைந்துபோக மனதில் அலையடிக்கும் ஓவியமாய் ஒளிர்கிறார். அவரது அழகான போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News January 12, 2026
ஒன்றாக டெல்லி செல்லும் நயினார், அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஒன்றாக நாளை மாலை டெல்லி செல்கின்றனர். ஜன.14-ம் தேதி அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பிரதமர் மோடியுடன் பொங்கல் விழாவில் இருவரும் பங்கேற்கவுள்ளனர். அப்போது, தற்போதைய தமிழக அரசியல் சூழல், கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


