News January 14, 2025

எல்லையருகே சீனா போர் பயிற்சி: மீண்டும் பதற்றமா?

image

இந்திய – சீன எல்லையில், கிழக்கு லடாக்கின் LAC அருகே, சீன ராணுவம் விரிவான ராணுவ ஒத்திகையை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாங்கிகள், டிரோன்கள், ரோபோ நாய்கள், கவச வாகனங்கள், எக்ஸோஸ்கெலட்டன் தொழில்நுட்ப கருவிகள் என ஹை-டெக் போர்முறையில் பரந்த அளவில் சீன வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் தான், எல்லை மோதலை தவிர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டது நினைவிருக்கலாம். சீனாவை நம்பலாமா?

Similar News

News November 13, 2025

மேகதாது அணைக்கு அனுமதி வழங்கவில்லை: துரைமுருகன்

image

மேகதாது அணை கட்ட SC எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடகா தன்னிச்சையாக அறிக்கை தயாரித்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசிடம் கருத்து கேட்க வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு SC உத்தரவிட்டிருந்தது.

News November 13, 2025

ரிலீசுக்கு முன்பே ₹325 கோடி ஈட்டிய ‘ஜனநாயகன்’

image

ரிலீசுக்கு முன்பே விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ கோடிகளை குவித்து வருகிறது. தமிழக திரையரங்க உரிமை ₹100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ₹80 கோடிக்கும், ஆடியோ உரிமை ₹35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. மேலும் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ₹110 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுவரை படத்தின் மொத்த வருவாய் ₹325 கோடியை தாண்டியுள்ளது. பொங்கல் வின்னராக மாறுவாரா ‘ஜனநாயகன்’..?

News November 13, 2025

விஜயகாந்த் வீட்டில் போலீஸ் குவிப்பு.. பதற்றம் உருவானது

image

சமீப காலமாக, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்று, பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸ் குவிக்கப்பட்டு அங்கு சோதனை நடைபெற்றது. ஆனால் இது புரளி என்பது சோதனையில் தெரியவந்தது. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், KS ரவிக்குமார், சாக்‌ஷி உள்ளிட்டோர் வீடுகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

error: Content is protected !!