News September 30, 2025
சென்னை: 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள 9 வெளிநாட்டு தூதரகங்களுக்கு EMAIL மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ரஷ்ய நாட்டு தூதரகங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் மும்பையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
ஆனந்த் அம்பானியுடன் மெஸ்ஸி PHOTOS

இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, வந்தாரா வனவிலங்கு மையத்தை அனந்த் அம்பானியுடன் சுற்றிப் பார்த்தார். அங்கு வனவிலங்குகளை பார்த்து மகிழ்ந்தார். இந்தியாவின் சுற்றுப்பயணம் நிச்சயம் அவருக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தந்திருக்கும். வந்தாராவில் ஆனந்த் அம்பானியுடன், மெஸ்ஸி சுற்றிப் பார்த்த போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 17, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 17, மார்கழி 2 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News December 17, 2025
மோடி ஒரு சிறந்த நண்பர்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவையும் PM மோடியையும் புகழ்ந்துள்ளார். இதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்வீட் செய்துள்ளது. அதில், ‘இந்தியா உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும். இது அற்புதமான நாடு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு முக்கியமான கூட்டு நாடு. PM மோடி எங்களுக்கு சிறந்த நண்பராக இருக்குறார்’ என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.


