News May 7, 2025
ஃபாலோவர்ஸ் குறைந்ததால் தற்கொலை செய்த பிரபலம்!

சோஷியல் மீடியா பிரபலம்<<16231412>> மிஷா அகர்வால்<<>>, தனக்கு இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் குறைந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் சகோதரி, பதிவிட்டு அதிரவைத்துள்ளார். அப்பதிவில், ‘மிஷாவின் போன் wallpaper எல்லாவற்றையும் சொல்கிறது. இன்ஸ்டா உண்மை உலகம் அல்ல, ஃபாலோவர்ஸ் உண்மையான உறவுகள் அல்ல.. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும்’ என கேட்டுக்கொண்டுள்ளார். ஃபாலோவர்ஸ் குறைந்ததால் தற்கொலையா?
Similar News
News November 19, 2025
ஆதார் கார்டில் வரும் முக்கிய மாற்றம்

ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை தடுக்க UIDAI முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டு வர உள்ளது. அதன்படி ஆதாரில் உள்ள மற்ற தகவல்களை நீக்கிவிட்டு வெறும் போட்டோ மற்றும் QR மட்டும் இடம்பெறும் வகையில் மாற்றப்பட உள்ளதாக UIDAI CEO புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஆஃப்லைன் சரிபார்ப்பை ஒழுங்குப்படுத்தும் புதிய விதியும் டிசம்பர் மாத்தில் கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார்
News November 19, 2025
43 தலைவர்களுக்கு காங்., ஷோகாஸ் நோட்டீஸ்

பிஹாரில் தேர்தலின் போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, Ex அமைச்சர்கள் உட்பட 43 மூத்த தலைவர்களுக்கு காங்கிரஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மாதம் 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதற்குள் அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால், கட்சியில் இருந்து நீக்கம் உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
News November 19, 2025
கனமழை… பள்ளிகளுக்கு விடுமுறையா?

கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு நாகை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விட வாய்ப்புள்ளது. இன்னும் சற்று நேரத்தில் விடுமுறை குறித்த அறிவிப்பை ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


