India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செஞ்சி தலவாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (26). இவர் வானூர் தாலுகா அலுவலகத்தில் லைசென்ஸ் சர்வேயராக பணியாற்றிவந்தார். நேற்று இரவு வானூர்-திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலையில் ஆகாசம்பட்டு பகுதியில் பைக்கில் சென்றபொழுது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். ஜிப்மரில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து வானூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் மற்றும் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதி வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 20) துவங்கியது. மக்களவை தனித் தொகுதியான விழுப்புரத்தில் நேற்று தேர்தல் அலுவலர் காலை 11 மணி முதல் 3 மணி வரை காத்திருந்தார். ஆனால் மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. மனு தாக்கல் நேற்று முதல் வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, 30ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிட உள்ளார். இதனையடுத்து அவர் இன்று காலை (மார்ச் 20) முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விழுப்புரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் விசிக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

மரக்காணம், பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த மணியரசு, அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நேற்று (மார்ச் 19) பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் அன்பு என்பவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அன்புவின் மனைவி வெண்ணிலாவிற்கும், மணியரசுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனை பலமுறை அன்பு கண்டித்தும் மணியரசு கேட்காததால் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, ஏரியில் மூழ்கடித்தது தெரியவந்துள்ளது.

பாரதிய ஜனதா மற்றும் பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் (தனி) தொகுதி வேட்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியில் பெரும் நன்மதிப்பைப் பெற்றுள்ள வடிவேல் ராவணன் இத்தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என பாமகவினர் எதிர்பார்க்கின்றனர்.

ஆரணி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக தரணிவேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம் சட்டமன்ற தொகுதிகள் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் கீழ் அடங்கும். மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, விழுப்புரம் எம்பி தொகுதியின் வேட்பாளராக விழுப்புரம் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஜெ.பாக்யராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Sorry, no posts matched your criteria.