India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாற்றம்பள்ளி தாலுக்கா சொரக்காயல் நத்தம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கி வீடியோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகியது. மேலும், இன்று மாணிக்கம் கிராம நிர்வாக அலுவலர் ரூ.25,000 லஞ்சம் வாங்கிய ஆசிரியரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் 2 கிராம நிர்வாக அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஜிடிபி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற்ற வாராந்திர திங்கள் தின குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்தும் பல்வேறு வகையான 307 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கடந்த சில வாரங்களாக மழை காரணமாக மனுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஷ்ரேயா குப்தா இன்று வெளியிட்ட அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து செல்வோம். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
திருப்பத்தூர் நகராட்சியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று (16.12.2024) மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். இதில் வட்டாட்சியர் (தேர்தல்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (16.12.2014) மக்கள் குறைதீர்வு கூட்டம் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைப்பெறும் எனவும், எனவே பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக அதிகாரிகளிடம் அளிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் அனைத்து திங்கட்கிழமைகளிலும் குறைதீர்வு கூட்டம் நடைப்பெறும். டிசம்பர் மாத மூன்றாவது வார மக்கள் குறைதீர்வு கூட்டம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 10 முதல் நடைப்பெறும் எனவும், இதில், மக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கந்திலி அருகே சந்திரபுரம் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி சந்தியா. இவரது கணவர் வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று இருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் (ம) விக்னேஷ் ஆகிய இருவருடன் சந்தியாவிற்கு தகாத உறவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி இருவரும் ஒரே நேரத்தில் சந்திக்கும் போது தகராறு ஏற்பட்டு, சந்தியாவை கொலை செய்தனர். இதில், நேற்று குமரேசன் மற்றும் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதில், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், கந்திலி, பர்கூர் பகுதிகளில் இருவர் வந்து பணிக்கு செல்லும் காவல்துறை அலுவலர்களின் மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை. நாட்றம்பள்ளி. வாணியம்பாடி. ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.