India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சட்டரீதியான தீர்வுகள் காண திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (18.12.2024 ) திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் “போலீஸ் அக்கா” ஆன்லைன் செயலி திட்டத்தை மாவட்ட காவல் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில்,வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கத்தில் இன்று (18.12.2024) ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வு படத்தை பதிவிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்காணும் இடங்களில் மின்தடை செய்யப்படவுள்ளது.பூஞ்சோலை, அக்ரஹாரம், வரதலம்புட், ராஜபுரம், வடகத்திப்பட்டி, தொல்லப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர், மடயப்பேட்டை.மேலரசம்புட், தீர்த்தம், முள்வாடி,கொட்டாவூர், வண்ணத்தாங்கல்., ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்பூட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம் போன்ற இடங்களில் மின்தடை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நகரம், கிராமிய காவல்நிலையங்கள் மற்றும் நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (17.12.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் தளத்தின் செயல்பட்டு வரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற 20.12.2024 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என திருப்பத்தூர் வேளாண்மை துணை இயக்குநரும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இன்று தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநில அளவில் பல்வேறு சிந்தனைகளை சமர்பித்த வெல்லக்கல்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் வெற்றி பெற காரணமான ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச-17) நேரில் அழைத்து பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியங்குப்பம் நமாஸ் மேடு பகுதியில் நேற்று (16.12.2024) இரவு நேரத்தில் அடையாள தெரியாத நபர்கள் இஸ்லாமிய தர்காகொடி இருந்த இடத்தை சேதப்படுத்தியுள்ளார்கள். இச் செயலில் ஈடுபட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய முஸ்லிம் ஜமாஅத் கமிட்டி சார்பாக ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதி நாட்றம்பள்ளி வட்டம், கேத்தாண்டிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் சாந்தகுமார், மும்பை இந்திய தொழில்நுட்பக்கழகத்தில், முதுகலை கணிதம் பட்டப்படிப்பு படித்து வருவதையறிந்து அவருக்கு பொன்னாடை அணிவித்து மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகளை தெரிவித்தார். இதில், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.