Tirupathur

News December 21, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை பதிவு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் தினம் ஒரு எச்சரிக்கை பதிவினை வருவது வழக்கம். அந்த வகையில், இன்று  தங்களின் நெருங்கிய நண்பர்களைப் போல் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படத்தை வைத்து, பின்னர் அவசர காரணங்களுக்காக பணம் வேண்டுமென நம்ப வைத்து ஏமாற்றி பணம் திருடும் சைபர் குற்றம் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 21, 2024

பாரண்டபள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டபள்ளி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி இன்று(டிச 21)  காலை 10.00 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இதில் பார்வை குறைபாடுகள், கண்ணில் சதை வளர்ச்சி போன்ற கண் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிசோதனை நடைபெறுகிறது. இந்த பரிசோதனை முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News December 20, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 20, 2024

மாவட்ட எஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள முக்கிய வழக்குகள் குறித்தும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 20, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை தகவல்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று சமூக வலைதளபக்கத்தில் கூறியுள்ளதாவது: கியூ-ஆர்-கோர்டு மூலமாக நூதன மோசடி நடந்து வருகிறது. யாரோ முன்பின் தெரியாத நபர் ஒருவர் தங்களுக்கு தெரியாமல் பணம் அனுப்பி விட்டதாகவும், அதை திருப்பி குறிப்பிட்ட கியூ-ஆர்-கோர்டுக்கு அனுப்புமாறு கேட்கின்றனர். அவ்வாறு பணத்தை திருப்பி அனுப்பும் போது தங்களது வங்கி கணக்கிலுள்ள அனைத்து பணமும் திருடுபோகிறதாக குறிப்பிட்டுள்ளது.

News December 20, 2024

விவசாயிகளுக்கு மினி டிராக்டர் வழங்கிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (20.12.2024) ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மனு அளித்த விவசாயிகளுக்கு, 6 லட்சம் மதிப்பிலான மினிடிராக்ரை ஆட்சியர் வழங்கினார்.

News December 20, 2024

திருப்பத்தூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (டிசம்பர் 20) காலை 10 மணி முதல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் பங்கு பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

சாலை விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தல்

image

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்ரேயா குப்தா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடைபெறும் நாடுகளில் தமிழகம் இரண்டாவது இடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 19, 2024

ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருப்பத்தூர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் வரும் 20.12.2024-ம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News December 19, 2024

ஜோலார்பேட்டை தொகுதியில் புதிய தொழில் பயிற்சி நிலையம் துவக்க விழா

image

ஜோலார்பேட்டை தொகுதி அன்னை நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் புதிய தொழில் பயிற்சி நிலையம் துவக்கம் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தொழில் பயிற்சி முகாமில் வரும் 30.12.2024 இலவச சேர்க்கை நடைபெறும் என மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

error: Content is protected !!