Tirupathur

News December 24, 2024

மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இரு சக்கர மற்றும் மூன்று சக்கர மற்றும் 20 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட 243 வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி பொது ஏலமானது வரும் டிசம்பர் 30 ஆம் தேதி திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 மணிமுதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 23, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News December 23, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற வாராந்திர குறைதீர்ப்பு முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்தும் பல்வேறு வகையான கோரிக்கைகள் அடங்கிய 391 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 23, 2024

அரை மணி நேரத்திற்கும் மேலாக பூட்டியிருக்கும் ரயில்வே கேட் 

image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியுடவுன் பகுதியில் உள்ள ரயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும் நிலையில் நேற்று (டிச 22) இரவு பூட்டப்பட்ட கேட், அரை மணி நேரத்திற்கும் மேலாக பூட்டப்பட்டதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்க்குள்ளாகினர்.

News December 22, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 22 ம்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News December 22, 2024

ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதி திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் ஊரில் உள்ள குறைகளை மனுக்களாக கொடுக்கும் மனுதாரர்களுக்கு ஆட்சியர் நேரடியான தீர்வுகளை வழங்குவார். அந்த வகையில் நாளை 23.12.2024 திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் குறைகளை மனுக்களாக தெரிவித்து தீர்வு பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News December 22, 2024

சாலை மறியல் எதிரொலி: பள்ளி தொடர்ந்து இயங்கும்

image

ஜோலார்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையத்தில் இயங்கி வரும் திவான் முகமது மெம்மோரியல் மெட்ரிக் பள்ளி வருகிற 31 ம் தேதி மூடப்படுவதாக தெரிவித்தனர். இதனால் நேற்று பெற்றோர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதன் எதிரொலி காரணமாக பள்ளி தொடர்ந்து இயங்கும் என அறிவித்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 21, 2024

திருப்பத்தூர் மாவட்டம்  ரோந்து போலீஸ் பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (இன்று டிசம்பர்.21 இரவு) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் ஆம்பூர் தாலுகா, ஆம்பூர் டவுன், வாணியம்பாடி தாலுகா, வாணியம்பாடி டவுன், திருப்பத்தூர் தாலுகா, திருப்பத்தூர் டவுன், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, கந்திலி, உமராபாத், உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் பட்டியல்.

News December 21, 2024

திருப்பத்தூர் அருகே பள்ளி மூடலால் போராட்டம்

image

நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திவான் முகமது பள்ளியை மூடுவதாக பள்ளி நிர்வாகம் திடீரென தெரிவித்ததை கண்டித்து குழந்தைகளின் பெற்றோர்கள் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுடன் நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

News December 21, 2024

சர்க்கரை ஆலையில் அரவை நிறுத்தம்; செய்தியாளர்கள் போராட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கேத்தாண்டப்பட்டி சர்க்கரை ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அரவை துவங்கிய நிலையில், இன்று (21.12.2024) கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இது குறித்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றபோது உள்ளே நுழையக்கூடாது என்று ஆலை லேபர் ஆபிசர் பன்னீர்செல்வம் கூறியதால் செய்தியாளர்கள் சர்க்கரை ஆலை வளாகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

error: Content is protected !!