Thenilgiris

News May 22, 2024

அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டம் அரவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) 10ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 156 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அனைவரும் மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 22, 2024

ஊட்டி விடுதியில் விஜிலென்ஸ் ரெய்டு

image

ஊட்டியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த, இந்து அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் (50) தங்கி இருந்தார். இந்த விடுதிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். பின்னர் அவர் தங்கி இருந்த அறையை சல்லடை போட்டு தேடி வருகின்றனர். மேலும் ஆய்வாளர் பாஸ்கரிடம் தற்போது துருவி, துருவி விசாரித்து வருகின்றனர்.

News May 22, 2024

மீண்டும் தொடங்கியது ஊட்டி ரயில்

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் பெய்த கன மழையால் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் சாய்ந்து, மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் குன்னூர் மலை ரயில் பாதையிலும் மண் சரிந்து பாறை உருண்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் 4 நாட்களாக நிறுத்தி வைத்திருந்த ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியதால் பயணிகள் பரவசம் அடைந்தனர்.

News May 22, 2024

இறந்தவர் உடலை தொட்டில் கட்டி சுமந்து சென்ற அவலம்

image

உல்லத்தி ஊராட்சி அழகர்மலை கிராமத்தில் 700 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமத்தில் நடைபாதை உட்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இந்நிலையில் கிராமத்தில் மூர்த்தி என்பவர் இறந்துள்ளார். பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை நேற்று உறவினர்கள் மூங்கில் தொட்டில் கட்டி ஒருவர்பின் ஒருவராக நகர்ந்து கடந்து மயானத்திற்கு கொண்டு சென்றனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 22, 2024

நீலகிரி: புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

image

பந்தலூர், தேவாலா திருமண மண்டபத்தில். தேவாலா வணிகர் நல  சங்க பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது. கூட்டத்தில்  தேவாலா வணிகர் நலச்சங்க தலைவராக ஷாகீர் உசேன், செயலாளராக சசிகுமார், பொருளாளராக உம்மர் உள்பட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளர் அப்துல் ரசாக், புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

News May 21, 2024

நீலகிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

image

கூடலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் கேரளா நோக்கி செல்லும்பாண்டியாறு-புன்னம்புழா ஆறுகளில் கலப்பதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு துறை ஒருங்கிணைந்து மீட்பு பணியினை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அங்கு செல்லக் கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

உதகை மலர் கண்காட்சி மேலும் 6 நாள்கள் நீட்டிப்பு

image

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 11 நாள் மலர் கண்காட்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் நிறைவு நாளில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மலர் கண்காட்சி இன்றுமுதல் மே 26ஆம் தேதிவரை 6 நாள்கள் நடைபெறும் என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மலர்காட்சி நுழைவு கட்டணம் ஏற்கெனவே நிர்ணயம் செய்தவாறு பெரியவர்களுக்கு ரூ.125, சிறுவர்களுக்கு ரூ.75 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

News May 21, 2024

நீலகிரி: கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு

image

நீலகிரி மாவட்டம் அரசு கலை கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க நேற்று (மே 20) கடைசி நாள் என ஊட்டி கல்லூரி முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பம் அனுப்புவதற்கான கால அவகாசம் மே 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து நாளையும் ரத்து

image

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ஹில்குரோவ், அடர்லி இடையே 17 ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையில் மலை ரெயில்  பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன.  அதனால் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி முடிய குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கனத்த மழை தொடர்ந்து பெய்துவருவதால் நாளை 21 ஆம் தேதி மலை ரயில் சேவை ரத்து செய்வதாக சேலம் கோட்டம் ரயில்வே தெரிவித்துள்ளது.

News May 20, 2024

நீலகிரி : நாளை மழைக்கு வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

error: Content is protected !!