Pudukkottai

News June 8, 2024

புதுகையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை

image

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, புதுகை உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News June 8, 2024

புதுகை: சீமைக் கருவேல மரங்களை அகற்ற முடிவு!

image

புதுக்கோட்டை, காரைக்குடி நெடுஞ்சாலையிலுள்ள கவிநாடு கண்மாயில் மாவட்ட சீமைக் கருவேல மரங்களை அகற்றும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 548 சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், வருவாய் அலுவலர் ஆர்.ரம்யாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News June 8, 2024

புதுக்கோட்டை:ஊர் காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

image

கடற்கரையோர காவல் நிலைய ஊர் காவல் படை பணிகளுக்கு மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது இதற்கான விண்ணப்பங்களை வருகின்ற 10ம் தேதி முதல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வருகின்ற 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் காலை 10 மணி முதல் 5 மணி வரை கல்விச் சான்றிதழ்கள் அசல் மட்டும் நகலுடன் நேரில் வருமாறு புதுக்கோட்டை எஸ்பி செய்தி வெளியீடு.

News June 8, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. எனவே மாவட்டத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகள், குறைகேட்பு கூட்டங்கள் வழக்கம்போல நடைபெறும். வருகின்ற திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக ஆட்சியரை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

புதுக்கோட்டை அலுவலகத்தில் சந்திப்பு கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தளர்ந்து அரசு அதிகாரிகளால் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை சந்தித்து கூட்டம் நடத்தினர்.

News June 7, 2024

புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

image

புதுகையில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எம்எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், அறிவியல் இயக்கத்தின் துணைத்தலைவர் சதாசிவம் தலைமையில், நேற்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில், நகராட்சி 26 வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினர். கருத்தரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தனபதி , முதன்மை விஞ்ஞானி ராஜ்குமார் ஆகியோர் பேசினர்.

News June 7, 2024

புதுக்கோட்டை அருகே மக்கள் தொடர்பு முகாம்

image

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டம், திருமயம் வட்டம், கோட்டூர் சரகம் லெம்பலக்குடி
கிராமத்தில் வரும் 12 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதனால் 7 ஆம் தேதி இன்று முதல் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான முன் மனுக்களை லெம்பலக்குடி கிராம சேவை மையத்தில் அளித்து பயன்பெறலாம். இத்தகவலை ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

புதுக்கோட்டையில் ஆலோசனை கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தொகுதி IV தேர்வு நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News June 7, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக பூட்டி சீல் வைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக புதுகை வட்டாட்சியர் அலுவலக வைப்பறையில் நேற்று பாதுகாப்பாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில்
பார்வையிட்டார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News June 6, 2024

ஆவுடையார்கோவில்: குளத்தில் மூழ்கடித்து கொலை

image

புதுகை, ஆவுடையார்கோவில் அருகே உள்ள அரசர்குளம் தென்பாதி பகுதியில் சாந்தி அம்மாள் என்ற மூதாட்டி குளிக்க சென்றுள்ளார். அவர் குளத்தில் குளித்திருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்கச் சங்கிலி மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கொலை செய்த நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!