Pondicherry

News June 26, 2024

புதுச்சேரி: பி.டெக். நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

புதுச்சேரியில் பி.டெக். படிப்பில் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் காலம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதை வருகிற 29 ஆம் தேதி வரை நீட்டித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்த மேலும் விவரங்களை சென்டாக் இணையதளம் மூலம் அறியலாம் என்று தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

அரசு அலுவலகங்களில் நாளை போதை எதிர்ப்பு உறுதிமொழி

image

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலர் ஜெய்சங்கர் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “நாளை சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழி நிகழ்ச்சியை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News June 25, 2024

புதுச்சேரி: விபத்தில் காவலர் உயிரிழப்பு

image

புதுச்சேரி-சென்னை இசிஆர் சாலை கடப்பாக்கம் அருகே இன்று கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், வில்லியனூர் காவல்நிலைய காவலர் செல்வம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் இருந்த சாமுவேல் மற்றும் சூர்யா ஆகியோர் படுகாயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 25, 2024

புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் பதவியேற்பு

image

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்தநிலையில் இன்று டெல்லி புதிய நாடாளுமன்றத்தில் அவர் எம்பி-யாக பதவியேற்றார். அவருக்கு தற்காலிக மக்களவை தலைவர் மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

News June 25, 2024

வரி செலுத்தாவிட்டால் 10 சதவீதம் வரை வட்டி

image

புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி நகராட்சியில் 2024-25 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி மற்றும் திடக்கழிவு அகற்றுவதற்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை மக்கள் தவிா்க்கவேண்டும் சொத்து வரியை கேட்பறிக்கை எதிா்பாராமல் செலுத்தாதவா்களுக்கு 10 சதவீதம் வரை வட்டி விதிப்பதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

புதுவை அதிமுக ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்திற்கு பலியான மக்களின் உயிரை பறித்த தமிழகத்தை ஆளும் காவல்துறையை தனது ஏவல்துறையாக வைத்திருக்கும் ஸ்டாலினை கண்டித்தும்  புதுச்சேரியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 200கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

News June 24, 2024

தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ கிரேடு

image

புதுச்சேரியில் உள்ள தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவின் தரநிலை வெளியீட்டு விழா இன்று தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. விழாவில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் NAAC குழு கல்லூரிக்கு வழங்கிய தர நிலையை வெளியிட்டார். இதில் தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ கிரேடு வழங்கியுள்ளனர்.

News June 24, 2024

அமைச்சர் திட்ட இயக்குனருடன் ஆலோசனை

image

காரைக்கால் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் CRP மற்றும் Book Keeper ஊழியர்கள் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய். சரவணன் குமாரை நேற்று நேரில் சந்தித்து தங்கள் துறை சார்ந்த தேவைகளை கோரிக்கையாக வைத்தனர்.அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் திட்ட இயக்குனர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

News June 23, 2024

அமித்ஷாவுடன் புதுச்சேரி ஆளுநர் சந்திப்பு

image

அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு அளித்து வரும் ஒத்துழைப்பிற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

News June 23, 2024

புதுவை: விரைவில் ரேஷன் கடை

image

காரைக்கால் மாவட்டத்திற்கு வந்த புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் இன்று காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். மேலும், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் விரைவில் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!