Pondicherry

News June 27, 2024

ரூ.1.85 கோடியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக் கூடம்

image

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.1.85 கோடியில் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை கூடம் நிறைவடையும் நிலையில் உள்ளதாக கூடத்தை நேற்று மருத்துவர்கள் உடன் ஆய்வு செய்த சிறுநீரகவியல்துறைத் தலைவர் கே.குமார் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

“போதை தனிமனிதனை சீரழித்துவிடும்”

image

புதுச்சேரியில் காவல் துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நேற்று நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில் “போதைப்பொருள்களைப் பயன்படுத்துபவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், அவர்களது நல்ல சிந்தனையும் அழிகிறது. போதைப்பொருள்களால் நாட்டின் வளா்ச்சியும் பாதிக்கப்படுகிறது. போதைக்கு அடிமையானவர்களுக்கு தங்களது செயல்பாடே தெரிவதில்லை” என்றார்.

News June 27, 2024

புதுவை: மருத்துவமனைகளுக்கு அறிவிப்பு

image

புதுச்சேரியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. இதில், 50% விபத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் நடைபெறுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு தற்போது புதுச்சேரி அரசு, “சாலை விபத்தில் சிக்குபவர்களின் ரத்தத்தில் மதுவின் அளவை மதிப்பீடு செய்ய வேண்டும்” என அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News June 26, 2024

புதுவை: மருத்துவமனைகளுக்கு அறிவிப்பு

image

புதுச்சேரியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. இதில், 50% விபத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் நடைபெறுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு தற்போது புதுச்சேரி அரசு, “சாலை விபத்தில் சிக்குபவர்களின் ரத்தத்தில் மதுவின் அளவை மதிப்பீடு செய்ய வேண்டும்” என அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News June 26, 2024

புதுவை பொதுமக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

image

புதுச்சேரி இணையவழி காவல்துறையினர் பொதுமக்களுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், “குழந்தைகள் சம்பந்தமான ஆபாச வீடியோக்களை பார்த்ததால் உங்களை விரைவில் கைது செய்வோம் என தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் போல் மோசடிகாரர்கள் பொதுமக்களை மிரட்டி வருகின்றனர். இது போன்று அழைப்பு வந்தால் புதுவை இணையவழி காவல்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.

News June 26, 2024

புதுச்சேரி மேலும் ஒருவர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏசுதாஸ் என்பவர் இன்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ராமநாதன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News June 26, 2024

காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை

image

புதுவை அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து, சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வரும் 28.6.2024 அன்று குழந்தை அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல், இருதயவியல் உள்ளிட்ட சிகிச்சை வழங்க உள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 26, 2024

புதுச்சேரி முதல்வர் அறிவுறுத்தல்

image

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தேசத்தின் ஆற்றலாக விளங்கக்கூடிய இளைஞர்கள் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

புதுச்சேரி இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இணையதளங்களில் வெளி வரும் வீட்டில் இருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம அல்லது பகுதி நேர வேலை போன்ற விளம்பரங்கள் வந்தால் பொதுமக்களுக்கு அவற்றை முற்றிலும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுபோல் கடந்த மாதம் பத்துக்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்து புகார் அளித்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

News June 26, 2024

புதுச்சேரியில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பலி எண்ணிக்கை 59 ஆக இருந்த நிலையில் இன்று(ஜூன் 26) காலை சேலம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்குமார் என்பவரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏசுதாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!