Tamilnadu

News August 24, 2025

தருமபுரி: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதன் மூலம் நீங்கள் பெற முடியும். மேலும் விபரங்களுக்கு உங்க பதிவு அலுவலகத்தை (04342-260895) தொடர்பு கொள்ளுங்க. ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

கிருஷ்ணகிரி: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க்<> மூலம்<<>> விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதன் மூலம் நீங்கள் பெற முடியும். மேலும் விபரங்களுக்கு உங்க பதிவு அலுவலகத்தை (04343-230171) தொடர்பு கொள்ளுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

வேகமெடுக்கும் ஓசூர் விமான நிலைய திட்டம்

image

ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. பெரிகை–பாகலூர் இடையே தேர்வு செய்யப்பட்ட இந்த தளம் TAAL ஓடுபாதையிலிருந்து 15.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அடுத்த 2 வாரங்களில் மாநில அரசு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி அனுமதி கோர உள்ளது. இதற்கிடையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் நிலம் கையகப்படுத்தல் முன்மொழிவை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்க உள்ளார்.

News August 24, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை (திங்கள்கிழமை) 25/8/2025 அதிகாலை 4:20 மணிக்கு ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்ல 07356 ஹூப்ளி – ஹூப்ளி ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம். நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

தாம்பரம் பெண்ணிடம் ரூ.1.24 கோடி மோசடி

image

தடைசெய்யப்பட்ட பொருட்களை அனுப்பியதாகக் கூறி தாம்பரத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ. 1.24 கோடியை மோசடி செய்த ஒடிசாவைச் சேர்ந்த தாவத் பிரவீன்குமார் (28), ஆகாஷ் மோகன்டி (26) ஆகிய இருவரைச் சென்னை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்வதாக மிரட்டி பணத்தைப் பறித்துள்ளனர். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 24, 2025

வேலூர்: பட்டா பற்றிய புதிய அறிவிப்பு

image

வேலூர் மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த<> லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் பெற முடியும். கூடுதல் தகவல்களுக்கு 0416-2221325இந்த என்னை தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளலாம். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர்

News August 24, 2025

புதுச்சேரியில் முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி

image

புதுச்சேரியில் சமீப காலங்களாக கோஷ்டி மோதலால் கொலைகள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று இன்று புதுச்சேரி சண்முகா திரையரங்கம் எதிரே பெரியார் நகரைச் சேர்ந்த லூர்து என்னும் வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்யும் நோக்குடன் தாக்கியுள்ளனர், பாதிக்கப்பட்ட நபர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News August 24, 2025

வைணவ கோவில்களுக்கு இலவச ஆன்மிக பயணம்

image

நாகை மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை சார்பில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு செப் 20, 27 மற்றும் அக் 4, 11 ஆகிய தேதிகளில் வைணவ கோவில்களுக்கு இலவசமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 60 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்துமதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாகை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகையை திருட்டிய 2 பேர் கைது

image

பெரம்பலூர் சாமியப்பா நகர் பகுதியை சேர்ந்த உமர் பாஷாவின் வீட்டில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வேப்பந்தட்டை பாலையூர் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (25), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகியோரை கைது செய்தனர்.

News August 24, 2025

குரூப்-2 தேர்வுக்கு கட்டணமில்லா இலவச வகுப்பு

image

செப்.,28ம் தேதி நடக்கவிருக்கும் குரூப் 2 போட்டித் தேர்வை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா இலவச வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வாரம், திங்கள்–பொருளியல், செவ்வாய்–கணக்கு, புதன்–விடுமுறை, வியாழன்–unit 6, வெள்ளி–வரலாறு ஆகிய வகுப்புகள் நடைபெறவுள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!