Tamilnadu

News August 24, 2025

திருச்சி: பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்ப தேதி அறிவிப்பு

image

2025-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விரும்புவோர் 01.09.25 முதல் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், செப்.30-ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே விசாரணைக்கு பிறகு உரிமம் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என மாநகர காவல் ஆணையர் காமினி அறிவித்துள்ளார்.

News August 24, 2025

கஞ்சா விற்ற 3 பேர் கைது

image

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா, இம்தியால், ஹேமநாதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News August 24, 2025

ஈரோடு அருகே தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கோபி வட்டம், கோபி ஈரோடு பிரதான சாலையில் அமைந்துள்ள சீதா கல்யாண மண்டபத்தில், நாளை (ஆக.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் படித்த, படிக்காத, முன் அனுபவம் உள்ள மற்றும் இல்லாதவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைக்கான வயது 18–50 வயது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. போட்டோ, ரேசன் கார்டு, படிப்பு சான்று, ஆதார் கார்டு ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

News August 24, 2025

நாமக்கல்: +2 தேர்வில் கால்குலேட்டர் வேண்டும் !

image

நாமக்கல், + 2 அக்கவுண்டன்சி பொதுத்தேர்வில், கால்குலேட்டர்கள் அனுமதிக்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து நேரடி நியமனம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு மற்றும் நிர்வாகிகள், சென்னையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் தேர்வுகள் துறை இயக்குனர் சசிகலாவை சந்தித்து பல்வேறு கோரிக்கை கொண்ட மனுவை அளித்தனர்.

News August 24, 2025

விடைபெற தயாராகும் பாம்பன் பாலம்

image

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள தூக்கு பாலம் 110 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையும், பொறியியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது பாம்பன் பாலம் விடைபெற தயாராகியது.

News August 24, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 23) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

கல்வி உதவித்தொகை பெற அஞ்சல் துறை அழைப்பு

image

ராமநாதபுரம் இந்திய அஞ்சல் துறையில் தபால் தலை சேகரிப்பு வினாடி- வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.6000 வழங்கப்படுகிறது.இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க 6 முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கும் ‘தீன் தயாள் ஸ்பார்ஷ்’ திட்டம் செயல்படுகிறது.

News August 24, 2025

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 2025க்கு, இணையதளம் வாயிலாக பதிவு மேற்கொண்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு தங்களுக்கான ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தகவல்.

News August 24, 2025

உழவர் சந்தை அங்காடி ஏலம் அறிவிப்பு

image

மகாராஜநகர் மற்றும் மேலப்பாளையம் உழவர் சந்தைகளில் உள்ள சிறப்பு அங்காடிகளை இயக்குவதற்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து மூடி முத்திரையிடப்பட்ட ஏலம் 03.09.2025 அன்று பிற்பகல் 3 மணிக்கு விடப்பட உள்ளது . திருநெல்வேலி விற்பனைக் குழு அலுவலகத்தில் அதே நாள் பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட கண்காணிப்புக்குழு தலைமையில் நடைபெறும்.

News August 24, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களிலேயே கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, தாமரைக்குளம், பச்சையம்மன் கோவில் குளம், சுகநதி, இறையூர் ஏரி, தென்பெண்ணையாறு, பூமா செட்டிகுளம், கோனேரியான்குளம், பையூர் பாறைக்குளம் மற்றும் காட்ராண்குளம் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!