India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விசிக கட்சிக்கு பானைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் விசிக சார்பில் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் விசிக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

2024 மக்களவை தேர்தலையொட்டி திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை திமுக தொகுதி வேட்பாளர்களான அண்ணாதுரை மற்றும் தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து ஏப்ரல் 3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். இதனையொட்டி முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடத்தினை துணை சபாநாயகர் பிச்சாண்டி இன்று (30-03-2023) நேரில் சென்று பார்வையிட்டார். இதில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். மதிமுக சின்னம் கோரியிருந்த நிலையில் அவருக்கு சற்றுமுன் இன்று தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 17 பேர் மனு நிராகரிக்கப்பட்டது. மீதம் உள்ள 18 நபர்கள் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில்
இன்று மதியம் 1:10 மணி வரை செங்கனன் , மகேந்திர சேகர், வெங்கடேசன் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். தற்போது மீதம் 15 மனுக்கள் மட்டுமே உள்ளன.

2024 மக்களவை தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோந்தே விஷால்தஷ்ரத் பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். உடன் திண்டுக்கல் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடி இருந்தனர்.

ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதல்வர் வருகையால் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏராளமான மக்கள் வருவர், எனவே திமுக நிர்வாகிகள் தொண்டர்களின் வசதிக்காக கூட்டத்திற்கு வருவதற்குரிய வழித்தடத்தையும் தூரம் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு கிளை நூலகத்தில் வாசகர் வட்டாரத்தின் சார்பாக நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளை இன்று கல்வி சுற்றுலாவாக மதுரை மாவட்டம் கீழவடி அகழாய்வு மையத்திற்கு, அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வில் வாசகர் வட்டார தலைவர் அன்புக்கரசன், மணி கார்த்திக் மற்றும் நூலகர்கள் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆரல்வாய்மொழி, நாகர்கோவில் பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக நாகர்கோவில் – கோவை ரயில் மார்.30, 31, ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் – நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல் கோவை- நாகை ரயில் மார்.30, 31, ஏப்.1ஆம் தேதிகளில் நெல்லை – நாகை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கருவேப்பிலைபாளையம் ஊராட்சியில், விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்யராஜ்-க்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். உடன் அதிமுக திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், தேமுதிக ஒன்றிய செயலாளர், அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இருந்தனர்.

வருமான வரி கணக்கில் முரண்பாடு இருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1823 கோடி அபராதம் விதித்து இருக்கிறது. வருமானவரித்துறை இது குறித்து திருச்சி எம்எல்ஏ இனிகோ இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இச்செயலை கண்டித்து காங்கிரஸ், போராட்ட களத்திலும் இறங்கி இருக்கிறது. இதனால் தேர்தல் வரும் முன்பே எதிரியின் முதுகெலும்பை உடைத்துக் களம் காண்பது கோழைத்தனம் என்று
விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.